’யப்பா சாமி தலையே சுத்துது’..!! ஒரே குடும்பத்தில் 1,200 பேர்..!! வாக்களிக்க 350 பேர் தகுதி..!!
அசாம் மாநிலத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 350 பேர் வரவிருக்கும் மக்களவை தேர்தலில் வாக்களிக்க உரிமை பெற்றிருப்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
அசாம் மாநிலம் சோனித்பூர் மாவட்டத்தில் புலோகுரி நேபாளி பாம் நகரில் ரான் பகதூர் தபா என்பவரின் குடும்பம் வசித்து வருகிறது. 1997இல் ரான் பகதூர் காலமானார். சோனித்பூர் மாவட்டம் என்பது ரங்கப்பாரா சட்டப்பேரவை தொகுதி மற்றும் சோனித்பூர் மக்களவைத் தொகுதிக்குள் வருகிறது. இவருடைய குடும்பத்தில் மொத்தம் 1,200 பேர் உள்ளனர். இந்நிலையில், வரவுள்ள மக்களவை தேர்தலில் 350 பேர் வாக்களிக்க உரிமை பெற்றுள்ளனர். இந்த விஷயம் மக்கள் மத்தியில் பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த ஊரிலேயே ஒரே குடும்பத்தில் மிக அதிக அளவிலான வாக்காளர்களை கொண்டது ரான் பகதூர் குடும்பம் தான். ரான் பகதூர் தபாவுக்கு 5 மனைவிகள் உள்ளனர். 12 மகன்கள் மற்றும் 9 மகள்களும் உள்ளனர். மறைந்த ரான் பகதூரின் மகன் டில் பகதூர் தாபா செய்தியாளர்களிடம் கூறுகையில், ”எங்களுடைய குடும்பத்தில் சுமார் 350 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். என் தந்தை 1964ஆம் ஆண்டில் என் தாத்தாவுடன் இங்கு குடியேறினார்.
என் தந்தைக்கு ஐந்து மனைவிகள். எனக்கு 12 சகோதரர்கள் மற்றும் 9 சகோதரிகள் உள்ளனர். எங்கள் பிள்ளைகள் உயர்கல்வி படித்தார்கள். ஆனால் அரசு வேலை கிடைக்கவில்லை. எங்கள் குடும்பத்தில் ஒரு சிலர் பெங்களூரு சென்று தனியார் நிறுவனங்களில் வேலை பார்த்தனர். சிலர் தினக்கூலிகளாக வேலை செய்கின்றனர். எனக்கு 3 மனைவிகள் மற்றும் 12 குழந்தைகள் உள்ளனர்” என்றார்.
Read More : இளைஞர்களே..!! நல்ல சம்பளத்தில் மத்திய அரசு வேலை..!! விண்ணப்பிக்க டைம் இல்ல..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!