வியட்நாமை சூறையாடிய யாகி!. பலி எண்ணிக்கை 226ஆக உயர்வு!. 100க்கும் மேற்பட்டவர்களை காணவில்லை!
Yagi Cyclone: வியட்நாம் நாட்டை தாக்கிய யாகி சூறாவளியில் சிக்கி இதுவரை 226 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 100க்கும் மேற்பட்டவர்களை காணவில்லை.
கடந்த வாரம் மணிக்கு 145 கி.மீ வேகத்தில் வியட்நாமை தாக்கிய யாஹி என்ற புயல் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. புயலை தொடர்ந்து பெய்த கனமழையால், அந்நாட்டின் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து மக்கள் படகுகள் மூலம் மீட்கப்பட்டனர். இதனிடையே மழை தொடர்பான விபத்துகளில் சிக்கி இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 226ஆக உயர்ந்துள்ளது. மேலும் மாயமான 100க்கும் மேற்பட்டவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் 800 பேர் காயமடைந்துள்ளதாகவும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
இந்த சூறாவளி காரணமாக மக்கள் தங்கள் வாழ்விடங்களை இழந்துள்ளனர். யாகி வியட்நாமில் இந்த நூற்றாண்டில் வீசிய மிக பயங்கரமான புயல் என்பது குறிப்பிடத்தக்கது. வெள்ளப்பெருக்கு காரணமாக வீடுகள், குடியிருப்புகள் மற்றும் வாகனங்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன. வியட்நாமை தொடர்ந்து யாஹி புயல், தாய்லாந்திலும் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மக்கள் கடும் இன்னல்களை சந்தித்துள்ளனர்.
Readmore: 1 கோடிக்கும் அதிகமான சிம் கார்டுகள் முடக்கம்!. மோசடியை தடுக்கும் வகையில் நடவடிக்கை!