எக்ஸ்-இல் கொண்டு வந்த சூப்பரான வசதி!! அனுப்பிய மெசேஜ்களை எடிட் செய்யலாம்.. எப்படி வொர்க் ஆகும்?
WhatsApp, Telegram, Signal மற்றும் Messenger போன்ற பல்வேறு சமூக ஊடக தளங்கள் மெசெஜ்களை எடிட் செய்யும் அம்சம் ஏற்கனவே நடைமுறையில் இருக்கிறது., இந்த வசதி X இல் இல்லாமல் இருந்த நிலையில், DMகளைத் திருத்த தற்போது எக்ஸ் இப்போது அனுமதிக்கிறது.
எலோன் மஸ்க்கின் சமூக வலைதளமான X முக்கிய அம்சங்களில் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த அம்சம் இப்போது iOS பயனர்களுக்குக் கிடைக்கிறது, மேலும் நிறுவனம் விரைவில் இதை மேலும் தளங்களில் வெளியிட திட்டமிட்டுள்ளது. இந்த அப்டேட் மூலம் பயனர்கள் தங்கள் செய்திகளை மெசேஜிங் ஆப்ஸில் எடிட் செய்ய முடியும். WhatsApp, Telegram, Signal மற்றும் Messenger போன்ற பல்வேறு சமூக ஊடக தளங்கள் தங்களில் முன்னதாகவே இந்த அம்சம் நடைமுறையில் உள்ள நிலையில், தற்போது எக்ஸ் தளத்திலும் இந்த வசதியை அனுமதிக்கிறது.
X இல் புதிய எடிட் செயல்பாட்டை எவ்வாறு பயன்படுத்தலாம்?
- நீங்கள் அனுப்பிய செய்தியையும் லாங் ப்ரெஸ் செய்யவும். அல்லது செய்திக்கு அருகில் உள்ள மூன்று-புள்ளி க்ளிக் செய்யவும்.
- அனுப்பிய செய்தியை மாற்ற “செய்தியை திருத்து” விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
செய்திகளைத் திருத்துவதற்கு நேர வரம்பு இல்லை. எடுத்துக்காட்டாக, WhatsApp மற்றும் Facebook Messenger இல் 15 நிமிட வரம்பு உள்ளது. ஆனால் எக்ஸ்-இல் நேர வரம்பு கிடையாது. பாதுகாப்பு காரணங்களுக்காக X இல் திருத்தப்பட்ட செய்திகளின் பதிவு வைக்கப்படும், ஆனால் செய்தி பயனர்களுக்கு பகிரப்படாது.
இந்தச் செயல்பாடு தற்போது iOS பயனர்களுக்கு மட்டுமே கிடைக்கிறது, அனைத்துப் பயனர்களுக்கும் விரைவில் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. நீங்கள் இன்னும் அணுகல் இல்லாத iOS பயனராக இருந்தால், உங்கள் X ஆப்ஸைப் புதுப்பித்து டெஸ்ட் செய்து பார்க்கவும். இருப்பினும், அனைத்து பயனர்களுக்கும் ரோல்அவுட்கள் தோன்றுவதற்கு நேரம் எடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
Read more ; பத்ம விருதுக்கு செப்.15-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்…!