WT20 WC!. இலங்கைக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் வெற்றி!.
WT20 WC: மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் 31 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தி பாகிஸ்தான் அணி வெற்றிபெற்றது.
ஐக்கிய அரபு நாடுகளில் ஐசிசி 2024 மகளிர் டி20 உலகக் கோப்பை தொடர் நேற்று(அக்.3) தொடங்கியது. சார்ஜாவில் நேற்றி நடைபெற்ற இரண்டாவது லீக் போட்டியில் குரூப் ஏ பிரிவில் இடம் வகிக்கும் பாகிஸ்தான் மற்றும் இலங்கை கிரிக்கெட் அணிகள் மோதின. அப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
தொடக்கம் முதலே தடுமாற்றத்துடன் விளையாடிய பாகிஸ்தான் அணி வீராங்கனைகள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இறுதியில் 20 ஓவர் முடிவில் பாகிஸ்தான் அணி, அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 116 ரன்கள் மட்டுமே எடுத்தது. பாகிஸ்தான் அணி தரப்பில் கேப்டன் பாத்திமா சானா 30 (20), நிதா தார் 23 (22) ரன்கள் எடுத்தனர். இலங்கைக்கு அதிகபட்சமாக கேப்டன் சமாரி அத்தப்பட்டு, சுகந்திகா குமாரி, பிராபோதனி தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதையடுத்து 117 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இலங்கை மகளிர் அணி தொடக்க வீராங்கனைகளான கேப்டன் சமாரி அத்தப்பட்டு 6 (9) ரன்களில் வெளியேறினார். இதையடுத்து, களமிறங்கிய சமரவிக்கிரமா, ஹாசினி பெரேரா, கவிசா பிலாரி ஆகியோர் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இது அந்த அணிக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்தது. அதன்படி, 20 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இலங்கை அணி, 85 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அதன்படி, 31 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வெற்றிப்பெற்றது.
Readmore: நவராத்திரி இரண்டாம் நாள்!. பூஜை நேரம், அலங்காரம், நைவேத்தியம் விவரம்!.