For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

’தவறாக கொடுத்த விளம்பரத்தை நியாயப்படுத்தவில்லை’..!! சுப்ரீம் கோர்ட்டில் கைகூப்பி மன்னிப்பு கேட்டார் பாபா ராம்தேவ்..!!

01:32 PM Apr 16, 2024 IST | Chella
’தவறாக கொடுத்த விளம்பரத்தை நியாயப்படுத்தவில்லை’     சுப்ரீம் கோர்ட்டில் கைகூப்பி மன்னிப்பு கேட்டார் பாபா ராம்தேவ்
Advertisement

”தவறாக கொடுத்த விளம்பரத்தை நியாயப்படுத்தவில்லை. உச்சநீதிமன்றத்தில் அளித்த உறுதியை எதிர்காலத்தில் மீற மாட்டேன். இதற்காக பொதுமன்னிப்புக் கேட்கவும் தயாராக உள்ளேன்" என்று சுப்ரீம் கோர்ட்டில் கைகூப்பி மன்னிப்புக் கோரினார் பாபா ராம்தேவ்.

Advertisement

குணப்படுத்தவே வாய்ப்பில்லாத நாள்பட்ட நோய்கள், மரபணு நோய்களை பதஞ்சலியின் ஆயுர்வேத மருந்துகள் குணப்படுத்தும் என்று பிரபல யோகா குரு பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் விளம்பரம் வெளியிட்டது. இந்த விளம்பரத்திற்கு எதிராக இந்திய மருத்துவ சங்கம் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கில் பதஞ்சலி நிறுவனத்தை கடுமையாக எச்சரித்ததுடன், தவறான விளம்பரங்களை வெளியிட வேண்டாம் எனவும் உத்தரவிட்டது. ஆனால், உத்தரவையும் மீறி தொடர்ந்து விளம்பரங்களை பதஞ்சலி நிறுவனம் வெளியிட்டு வந்தது.

இதையடுத்து, பதஞ்சலி நிறுவனத்தின் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் பதில் மனுவை தாக்கல் செய்யாமல் பதஞ்சலி நிறுவனம் காலம் கடத்தி வந்தது. இதனை கோர்ட் கடுமையாக கண்டித்ததால், ராம்தேவ் மன்னிப்புக் கோரினார். ”இனி இதுபோன்ற விளம்பரங்கள் செய்ய மாட்டோம்” என்று உறுதியும் அளித்தார். ஆனால், மன்னிப்புக் கோரி, ராம்தேவ் தாக்கல் செய்த புதிய மனுவை உச்சநீதிமன்றம் ஏற்க மறுத்துவிட்டது. கடந்த 10ஆம் தேதி நடந்த விசாரணையின்போது, “உச்சநீதிமன்ற உத்தரவை வேண்டுமென்றே மீறியுள்ளதால், ராம்தேவ் எத்தனை முறை மன்னிப்புக் கேட்டாலும் ஏற்க முடியாது. நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நடவடிக்கையை எதிர்கொள்ள தயாராக இருங்கள்" என்று நீதிமன்றம் எச்சரித்தது.

இந்நிலையில், இந்த வழக்கின் விசாரணை இன்று மீண்டும் நடைபெற்றது. அப்போது நேரில் ஆஜரான பாபா ராம்தேவ், சுப்ரீம் கோர்ட்டில் அளித்த உறுதியை மீறி விளம்பரம் வெளியிட்டதற்காக கைகூப்பி மன்னிப்புக் கோரினார். "உச்சநீதிமன்றத்தில் அளித்த உறுதியை எதிர்காலத்தில் மீற மாட்டேன். தவறாக கொடுத்த விளம்பரத்தை நியாயப்படுத்தவில்லை. ஊடகங்களில் தங்கள் நடத்தைக்காக பகிரங்க மன்னிப்புக் கேட்க தயாராக இருக்கிறேன்" என்றும் தெரிவித்தார். இதையடுத்து வழக்கை வரும் 23ஆம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிமன்றம், அன்றும் பாபா ராம்தேவ் கண்டிப்பாக ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டது.

Read More : விஜய் கூட அது நடந்தது உண்மை தானா..? தனியாக தவிக்கும் மனைவி சங்கீதா..!! வைரல் புகைப்படம்..!!

Advertisement