புகழ்வதற்கு ஒன்றும் இல்லை.. வாழை ஒரு ஆபாச திரைப்படம்..!! சர்ச்சையை கிளப்பிய எழுத்தாளர் - வச்சு செய்யும் நெட்டிசன்கள்..
வாழை படத்தில் காட்டப்படும் பூங்கொடி டீச்சர் - சிவனைந்தன் இடையே முறையற்ற உறவு இருப்பதாக விமர்சித்து எழுத்தாளர் சாரு நிவேதிதா சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.
இயக்குநர் மாரிசெல்வராஜ் இயக்கத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியான வாழை திரைப்படத்திற்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் வாழை ஒரு ஆபாச படம் என விமர்சித்துள்ளார் பிரபல எழுத்தாளரான சாரு நிவேதிதா பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில், "வாழை படத்தில் வரும் டீச்சர் பூங்கொடி, மாணவன் சிவனைந்தன் காட்சிகள் அனைத்தும் தாய்லாந்தின் லைவ் ஷோ காட்சிகளின் soft version ஆகவே எடுக்கப்பட்டிருக்கின்றன. அங்கே நேரடியாக நடக்கும். இங்கே மறைமுகமாக நடக்கிறது. ஆனால் அப்படி எதுவும் இல்லை என்பதான பாசாங்குதான் இந்தப் படத்தை சமூக விரோதமான படைப்பாக மாற்றுகிறது. ஏன் சமூக விரோதம் என்றால் படத்தில் காட்டப்படுவது பச்சைப் பொய். சிவனைந்தன் எட்டாம் வகுப்பு மாணவன். வயது பதின்மூன்று. டீச்சர் பூங்கொடிக்கு வயிறு இருபத்து இரண்டும் இருக்கலாம்.
டீச்சரும் சிவனைந்தனும் வரும் காட்சிகள் அனைத்திலுமே பாலியல் சமிக்ஞைகள் படு தீவிரமாக உணர்த்தப்படுகின்றன. என்னைப் போல் அது புரியாத அசடுகளுக்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தெள்ளத் தெளிவாகத் தன் இசையின் மூலம் அந்தப் பாலியல் சமிக்ஞைகளைப் புரிய வைத்து விடுகிறார். இயக்குனர் சூசகமாகச் சொல்ல நினைப்பதை இசையமைப்பாளர் நம் கண் முன்னே தூலமாக எடுத்துக் காட்டுகிறார். நம் செவிகள் கேட்பதை கண்கள் புரிந்து கொள்கின்றன.
இன்னொரு விஷயம், இரண்டு திரவங்கள் குறித்து. விந்து, கண்ணீர். பார்வையாளர்களிடம் இரண்டையும் வரவழைத்து வெற்றி அடைந்து விட்டார் இயக்குனர் மாரி செல்வராஜ். மரணமும் செக்ஸும் ஒன்றுதான் என்கிறார் ஃப்ரெஞ்ச் தத்துவவாதி ஜார்ஜ் பத்தாய் (Georges Bataille). தூக்கு மாட்டிச் சாகும்போது விந்து வெளிவரும். செக்ஸின் போது மரணத்தைப் போலவே நம்மை மறக்கிறோம்.
ஆனால் வாழை படத்தில் பூங்கொடி டீச்சர் கதைக்கும், வாழைத்தோட்டத் தொழிலாளர்கள் கதைக்கும் சம்பந்தமே இல்லை. ஒரு ரூபாய் கூலி உயர்வு கேட்டார்கள், முதலாளியின் சுரண்டல் குணத்தால் இருபது தொழிலாளர்கள் செத்தார்கள் என்ற கண்ணீர்க் கதையை மட்டும் சொன்னால் மக்களிடையே எடுபடாது என்பதால்தான் இயக்குனர் டீச்சரின் மென்மையான ஆபாச கதையையும் இடையில் சேர்த்திருக்கிறார். அதிலும் படு பாசாங்க" என விமர்சித்துள்ளார்.
Read more ; இந்தியாவில் பரவிய Mpox.. கொடிய நோயிலிருந்து பாதுகாப்பது எப்படி? மருத்துவர் தரும் அட்வைஸ்..!!