For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

காங்கிரஸில் இணைந்த வினேஷ் போகட், பஜ்ரங் புனியா..!! ஹரியானா-வில் போட்டி?

Wrestlers Bajrang Punia and Vinesh Phogat joined the Congress party.
03:55 PM Sep 06, 2024 IST | Mari Thangam
காங்கிரஸில் இணைந்த வினேஷ் போகட்  பஜ்ரங் புனியா     ஹரியானா வில் போட்டி
Advertisement

மல்யுத்த வீரர்களான பஜ்ரங் புனியா மற்றும் வினேஷ் போகட் இருவரும் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.

Advertisement

நடந்து முடிந்த ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்ட மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், 100 கிராம் கூடுதலாக உடல் எடை இருந்தார் என்று கூறி தகுதி நீக்கம் செய்யப்பட்டார். மன வேதனையில், அவர் மல்யுத்த விளையாட்டிலிருந்தே ஓய்வுபெறுவதாக அறிவித்திருந்தார். இது நாட்டு மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில், ஒட்டுமொத்தநாடும் வினேஷ் போகத்துக்கு ஆறுதல் கூறி, இயல்பு நிலைக்குத் திரும்ப வழிவகை செய்தது.

இந்த நிலையில் மல்யுத்த வீரர்களான பஜ்ரங் புனியா மற்றும் வினேஷ் போகட் இருவரும் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர். அண்மையில் புது தில்லியில், இருவரையும் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி சந்தித்துப் பேசியிருந்த நிலையில், இன்று மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா, வீராங்கனை வினேஷ் போகத் இருவரும் கட்சியில் முறைப்படி இணைந்துள்ளனர்.

தில்லியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் கே.சி. வேணுகோபால் முன்னிலையில், பஜ்ரங் புனியா மற்றும் வினேஷ் போகத் இருவரும் கட்சியில் இணைந்தனர். ஹரியாணா மாநில சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டு, வினேஷ் போகத் தேர்தலில் போட்டியிடுவார் என தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், இன்று அவர் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார். இதன் மூலம், அவர் காங்கிரஸ் சார்பில் தேர்தலில் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இம்மாநிலத்தில் மொத்தம் 90 சட்டமன்ற தொகுதிகள் இருக்கின்றன. இந்த தொகுதிகளை அனைத்திற்கும், அக்டோபர் 1ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. பதிவாகும் வாக்குகள் அக்டோபர் 4ம் தேதி எண்ணப்பட்டு, அன்றே முடிவுகள் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Read more ; ரொம்ப நாளா எதிர்பார்த்த அப்டேட்.. வந்தாச்சு!! இனி ஒரே UPI அக்கவுண்டை 5 பேர் பயன்படுத்தலாம்..

Tags :
Advertisement