For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

WrestleMania 40: கோடி ரோட்ஸை கன்னத்தில் அறைந்த "ராக்".! 'ட்ரிபிள் எச்'-க்கு நேரடி மிரட்டல்..! உச்சத்தை தொட்ட 'பிளட் லைன்' மோதல்.!

01:27 PM Feb 09, 2024 IST | 1newsnationuser4
wrestlemania 40  கோடி ரோட்ஸை கன்னத்தில் அறைந்த  ராக்     ட்ரிபிள் எச்  க்கு நேரடி மிரட்டல்    உச்சத்தை தொட்ட  பிளட் லைன்  மோதல்
Advertisement

'WrestleMania 40' பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் வெடித்த மிகப்பெரிய மோதல் 'WWE' ரசிகர்களிடையே மிகப் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பின்போது மக்கள் சாம்பியன் மற்றும் ஹாலிவுட் சூப்பர் ஸ்டார் 'தி ராக்'(Dwayne Johnson), ராயல் ரம்பிள் சாம்பியன் கோடி ரோட்ஸை கன்னத்தில் அறைந்ததால் மிகப்பெரிய பதற்றம் ஏற்பட்டது. இந்த நிகழ்வின் போது உடன் இருந்த ட்ரிப்பிள் எச், நிக் ஆல்டிஸ் மற்றும் பலர் அவர்களிடையே நடைபெற்ற சண்டை தீவிரம் அடையாமல் தடுத்து நிறுத்தினர்.

Advertisement

Wrestlemania 40 போட்டியில் ராக் மற்றும் ரோமன் ரெயின்ஸ் இடையே மோதல் நடைபெறுவதாக இருந்தது. இதனை கோடி ரோட்ஸ் விரும்பவில்லை. ஆனால் ரோமன் ரெயின்ஸ், ராக்குடன் மோதுவதையே விரும்பினார். இந்நிலையில் . 'ராயல் ரம்பிள்' சாம்பியன் கோடி ரோட்ஸ் அந்தப் போட்டிக்கு ரோமன் ரெயின்ஸ் உடன் மோதுவதாக அறிவித்தார். 'ராயல் ரம்பிள்' சாம்பியன் ஆன தனக்கு தன்னுடன் மோதும் போட்டியாளரை தேர்ந்தெடுப்பதற்கு அதிகாரம் இருக்கிறது என கூறிய கோடி ரோட்ஸ் இறுதிப்போட்டியில் தன்னுடன் மோத இருப்பது ரோமன் ரெயின்ஸ் என அறிவித்தார்.

இந்நிலையில் பத்திரிக்கையாளர் சந்திப்பின்போது ராக் மற்றும் ரோமன் ரெயின்ஸ் ஆகியோர் குருதி வழி தொடரும் பாரம்பரியம் பற்றியும் WWE குடும்பம் பற்றியும் பேசினர். மேலும் பட்டத்திற்காக நடக்கும் இந்த பிரம்மாண்டமான யுத்தத்தில் ராக் மற்றும் ரோமன் ரெயின்ஸ் மோதல் குறித்தும் மக்கள் சாம்பியன் ராக் பேசினார். மேலும் WWE யுனிவர்சல் என்ன நினைக்கிறது என்பதை பற்றி கவலை இல்லை . இறுதி மோதல் ராக் மற்றும் ரோமன் ரெயின்ஸ் ஆகியோருக்கு இடையே தான் நடைபெறும் என பிடிவாதமாக தெரிவித்தார்.

ஆனால் லாஸ் வேகாஸ் அரங்கத்தில் கூடியிருந்த மக்களிடையே ராக் பேசியது அதிருப்தி மற்றும் எதிர்மறையான கருத்துக்களை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து அந்த அரங்கத்தில் கூடியிருந்த ரசிகர்கள் எங்களுக்கு ராக் வேண்டாம் கோடி ரோட்ஸ் தான் வேண்டும் என்ற கோஷங்களை எழுப்பினர். WWE விளையாட்டில் கடந்த 2 தசாப்தங்களாக கொண்டாடப்பட்டு வந்த மக்கள் சாம்பியன் ராக் மக்களிடமிருந்து இப்படி ஒரு எதிர்ப்பை இதற்கு முன்பு சந்தித்ததில்லை. இந்நிலையில் தனக்கு பதிலாக மக்கள் கோடி ரோட்ஸை கொண்டாடுவதை பொறுத்துக் கொள்ள முடியவில்லை. மேலும் மக்களிடமிருந்து அவர் இந்த எதிர்ப்பை எதிர்பார்க்கவில்லை.

இந்நிலையில் அரங்கத்திற்குள் நுழைந்த கோடி ரோட்ஸ் இரண்டு முறை ராயல் ரம்பிள் சாம்பியனான நான் இறுதிப் போட்டியில் என்னுடைய போட்டியாளராக ரோமன் ரெயின்ஸை தேர்வு செய்கிறேன் என அறிவித்தார். இதனைத் தொடர்ந்து ரசிகர்கள் உற்சாகத்தில் கரகோஷம் எழுப்பினர். அதில் அரங்கமே அதிர்ந்தது. மேலும் இது சாம்பியனின் முடிவு எனவும் கோடி ரோட்ஸ் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து ராக் மற்றும் ரோமன் ரெயின்ஸ் ஆகியோரின் பிளட் லைன் குறித்தும் மோசமான வார்த்தைகளால் விமர்சனம் செய்தார் கோடி ரோட்ஸ். இதனால் ஆத்திரமடைந்த ராக் பத்திரிக்கையாளர் சந்திப்பு மேடையில் வைத்தே கோடி ரோட்ஸை கன்னத்தில் அறைந்தார்.

இதனைத் தொடர்ந்து இருவருக்கும் இடையே மிகப் பெரிய மோதல் உருவாகும் சூழல் ஏற்பட்டது. இந்நிலையில் ட்ரிபிள் ஹெச் மற்றும் மேடையில் இருந்த பலரும் அவர்கள் இருவரையும் விலக்கி விட்டனர். மேலும் அவர்களை மேடையில் இருந்து அப்புறப்படுத்தி அழைத்துச் சென்றனர். இது தொடர்பாக நடைபெற்ற பேச்சு வார்த்தையில் இறுதிப் போட்டி யாருடன் நடைபெற வேண்டும் என்று முடிவு செய்யும் அதிகாரம் ராக்கிற்கு இல்லை என ட்ரிபிள் எச் தெரிவித்தார். இது தொடர்பாக பேசிய ராக் "இந்தப் பிரச்சனையை ஏற்றுக் கொள்கிறேன். சரி செய்ய வேண்டும் என கூறினார்"; மேலும் இன்னொரு முறை பிளட் லைன் மற்றும் WWE குடும்பத்தை பற்றி தவறாக பேசினால் இதுதான் நடக்கும்" என எச்சரிக்கை செய்தார்.

இதற்கு பதில் அளித்த ட்ரிபிள் ஹெச், ராக் வரம்பு மீறியதாக அவரிடம் தெரிவித்தார். மேலும் யாருடன் யார் மோத வேண்டும் என்பதை முடிவு செய்யும் அதிகாரம் ராக்கிற்கு இல்லை எனவும் தெரிவித்தார். இதற்கு பதிலடி கொடுத்த ராக் தனக்கு அதிகாரம் இருப்பதாக தெரிவித்த அவர் தான் வரம்பிற்கு உட்பட்டு பேசியதாக கூறினார். மேலும் இந்தப் பிரச்சனையை சரி செய்யவில்லை என்றால் நாங்கள் சரி செய்து கொள்வோம் என ட்ரிபிள் ஹெச்-க்கு மிரட்டல் விடுத்தார் மக்கள் சாம்பியனான 'தி ராக்'.

Tags :
Advertisement