வாவ்!… உலகின் மிகப்பெரிய தேர்தல் திருவிழா!… சிறப்பு டூடுலை வெளியிட்ட கூகுள்!
Google Doodle: நாட்டில் முதல்கட்ட மக்களவைத் தேர்தல் இன்று தொடங்கியதை குறிப்பிடும் வகையில் கூகுள் சிறப்பு டூடுலை வெளியிட்டுள்ளது.
இந்தியாவின் அடுத்த பிரதமர் யார் என்ற கேள்விக்கு பதிலளிக்கும் விதமான உலகமே உற்று நோக்கும் இந்திய மக்களவை தேர்தல் இன்று தொடங்கியது. 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவை தொகுதிகளுக்கு முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது. தமிழ்நாடு, புதுச்சேரி உள்பட 40 மக்களவை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு காளை 7 மணிக்கு தொடங்கியது. தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவை தொகுதிகளுக்கு 68, 321 வாக்குச்சாவடிகளுக்கு அமைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் 6.23 கோடி வாக்காளர்கள் உள்ள நிலையில், 10. 92 லட்சம் பேர் முதல்முறையாக வாக்களிக்க உள்ளனர்.
அந்த வகையில் முதல்கட்ட மக்களவைத் தேர்தல் இன்று தொடங்கியதை குறிப்பிடும் வகையில் கூகுள் சிறப்பு டூடுலை வெளியிட்டுள்ளது. இது இந்தியாவில் உள்ள கூகுள் பயனர்களுக்கு டிஸ்பிளே ஆகும் என தெரிகிறது. இதில் Google என ஆங்கில மொழியில் உள்ள கூகுள் தளத்தின் முகப்பில் உள்ள இரண்டாவது ‘O’-வுக்கு பதிலாக சுட்டு விரலில் வாக்கு செலுத்தியதற்கான அடையாள மையுடன் கூடிய எமோஜி வகையிலான படம் இடம்பெற்றுள்ளது. அது வாக்குப்பதிவின் அவசியம் குறித்து பயனர்களும் நினைவூட்டும் வகையில் அமைந்துள்ளது.
Readmore: தனது சொந்த ஊரில் முதல் ஆளாக ஜனநாயக கடமையாற்றினார் எடப்பாடி பழனிசாமி..!!