அடடே..!! சூப்பர் அறிவிப்பை வெளியிட்ட டிஎன்பிஎஸ்சி..!! Typist பணியிடங்கள்..!! விண்ணப்பிக்க ரெடியா..?
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) அமைச்சுப் பணியில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையில் தட்டச்சர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தட்டச்சர் (Typist)
காலியிடங்களின் எண்ணிக்கை : 50
கல்வித் தகுதி : 10ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தட்டச்சுத் தேர்வில் கண்டிப்பாக தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கணினியில் அலுவலக தானியங்கமாக்கல் (Computer Automation) சான்றிதழ் அவசியம்.
சம்பளம் : 8ஆம் நிலை ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் வழங்கப்படும்.
வயது வரம்பு : 01.07.2024 அன்று படி, 32 வயதிற்குள் இருக்க வேண்டும். பி.சி/எம்.பி.சி பிரிவினர் 34 வயதிற்குள்ளும், எஸ்.சி/எஸ்.சி.ஏ/எஸ்.டி பிரிவினர் 37 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை : எழுத்துத் தேர்வு
தேர்வு நடைபெறும் முறை :
எழுத்துத் தேர்வு இரண்டு தாள்களாக நடைபெறும். முதல் தாள் பொதுத் தமிழ். இதில் 150 மதிப்பெண்களுக்கு 100 வினாக்கள் கேட்கப்படும். குறைந்தபட்சம் 60 மதிப்பெண்கள் பெற வேண்டும்.
இரண்டாம் தாள் பொது அறிவு. இதற்கும் 150 மதிப்பெண்களுக்கு 100 வினாக்கள் கேட்கப்படும். பொது அறிவில் இருந்து 75 வினாக்களும், திறனறிவு பகுதியில் இருந்து 25 வினாக்களும் கேட்கப்படும்.
விண்ணப்பக் கட்டணம் : ரூ.150 செலுத்த வேண்டும். ஏற்கனவே நிரந்தர பதிவு எண் வைத்திருப்பவர்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை.
விண்ணப்பிக்கும் முறை :
https://www.tnpsc.gov.in/ என்ற இணையதள பக்கத்திற்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும். நிரந்தர பதிவு வைத்திருப்பவர்கள் அதன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க கடைசி தேதி : 24.12.2024
மேலும் விவரங்களுக்கு https://www.tnpsc.gov.in/Document/tamil/SCE Tamil Final_.pdf என்ற இணையதள பக்கத்தை பார்வையிடவும்.
Read More : மனைவிக்கு ரீல்ஸ் மோகம்..!! கணவனுக்கு வந்த சந்தேகம்..!! போர்வைக்குள் 3 குழந்தைகள்..!! கண்முன்னே நடந்த பயங்கர சம்பவம்..!!