WOW!. தோனியாகவே மாறிய ருதுராஜ்!. மகாராஷ்டிரா ப்ரீமியர் லீக் தொடரில் விக்கெட் கீப்பராக அசத்தல்!
Ruturaj Gaikwad: மகாராஷ்டிரா ப்ரீமியர் லீக் தொடரில் விக்கெட் கீப்பராக செயல்படும் ருதுராஜ் கெய்க்வாட் Puneri Bappa அணிக்காக விளையாடி வருகிறார்.
ருத்துராஜ், ஸ்பார்க், ராக்கெட் ராஜா இதெல்லாம் ருதுராஜ் கெய்க்வாட்டின் செல்லப் பெயர்கள். மகாராஷ்டிராவை பூர்வீகமாகக் கொண்ட ருதுராஜை 2019 ஐபிஎல் தொடருக்காக டிசம்பர் 2018-ல் நடந்த ஏலத்தில் 20 லட்ச ரூபாய்க்கு வாங்கியது சென்னை சூப்பர் கிங்ஸ். அப்போது அவருக்கு வயது 21. 2019 சீசனில் ஒரு போட்டியில் கூட ருதுராஜ் களமிறக்கப்படவில்லை.
2020-இல் ருதுராஜுக்கு சி.எஸ்.கேவில் ஆடும் லெவனில் இடம் கிடைத்தது. அதுவும் வெறு ஆறு போட்டிகளில். இதில் 2 முறை டக் அவுட்டாகி வெளியேறினார். சி.எஸ்.கேவுக்காக களமிறங்கிய தொடக்கத்திலேயே கடும் நெருக்கடிக்குள்ளானார். கிடைத்த வாய்ப்பை வீணடிப்பதாக விமர்சனங்கள் எழுந்தன.
இளம் வீரர்களிடம் போதிய ஸ்பார்க் இல்லை என தோனியும் காட்டமாக பேசினார். அதன் பிறகு ருதுராஜின் ஆட்டப்பாணி வேறொரு திசையில் நகர்ந்தது. அதே தொடரில், தொடர்ச்சியாக 3 ஆட்டங்களில் அரைசதம் விளாசினார். 65(51) vs RCB; 72(53) vs KKR; 62(49) vs KXIP. 13 ஆண்டுகால சி.எஸ்.கே வரலாற்றில் தொடர்ந்து 3 போட்டிகளில் அரைசதம் விளாசிய முதல் வீரர் எனும் பெயரை தனது துடிப்பான பேட்டிங்கால் நிலைக்கச் செய்தார். சி.எஸ்.கேவின் ஜாம்பவான்கள் மைக்கேல் ஹஸி, ஷேன் வாட்சன், மேய்த்யூ ஹேடன், முரளி விஜய், சுரேஷ் ரெய்னாவால் கூட இந்த மைல்கல்லை எட்ட முடிந்ததில்லை. “ஸ்பார்க் இல்லை என்றார்கள்; கொளுந்துவிட்டு எரிகிறாரே” என சமூக ஊடகங்களில் அப்போது பாராட்டுகள் குவிந்தன.
2021-ல் ருதுராஜின் பங்களிப்பு சென்னை அணிக்கு கோப்பையை வென்று கொடுக்க முக்கிய காரணியாக அமைந்தது. டு பிளெசி உடன் அவர் ஓபனிங் ஆடினார். 16 போட்டிகளில் 4 அரைசதம் ஒரு சதம் என மொத்தம் 635 ரன்களை குவித்து ‘ஆரஞ்சு கேப்பை’ பெற்றார். அந்த சீசனில் சென்னை அணி கோப்பையை வென்றது. அதன் பின் 2022-ல் 6 கோடி ரூபாய்க்கு ருதுராஜ் கெய்க்வாட்டை தக்க வைத்தது சி.எஸ்.கே.
ருதுராஜ் இயல்பிலேயே அமைதியானவர் என்பதால் அது சி.எஸ்.கேவின் சூழலுக்கும் ஒத்துப்போகிறது. தொடக்கத்தில் ருதுராஜ் கடுமையாக தடுமாறியபோது சி.எஸ்.கே அவருக்கு பக்கமலமாக நின்றது. அதன் பிறகு தனது ஆட்டத்தை சிறப்பாக எடுத்துச் சென்றார். அதிலிருந்து ஒரு 3 – 4 ஆண்டுகளில் சி.எஸ்.கேவின் கேப்டனாக உயர்ந்திருப்பதே நல்ல சாதனைதான்”
ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடர் கோடைகாலத்தில் இந்திய ரசிகர்களை மகிழ்வித்து நிறைவு பெற்றது. அந்த தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 3வது கோப்பையை வென்று சாதனை படைத்தது. மறுபுறம் நடப்புச் சாம்பியனாக களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் தங்களுடைய கடைசி லீக் போட்டியில் ஆர்சிபி அணியிடம் தோல்வியை சந்தித்து நூலிலையில் பிளே ஆஃப் சுற்று வாய்ப்பை நழுவ விட்டது.
முன்னதாக இந்த வருடம் சிஎஸ்கே அணியின் கேப்டன்ஷிப் பொறுப்பை ருதுராஜ் கெய்க்வாட்டிம் ஒப்படைத்த தோனி, சாதாரண விக்கெட் கீப்பராக விளையாடினார். சிஎஸ்கே 5 கோப்பைகளை வென்று வெற்றிகரமான அணியாக சாதனை படைக்க முக்கிய பங்காற்றிய தோனி, தற்போது 42 வயதை தொட்டு விட்டார். அதனால் வருங்காலத்தை கருத்தில் கொண்டு அவர் எடுத்த இந்த முடிவு சென்னை அணிக்கு பெரிய பாதகத்தை ஏற்படுத்தவில்லை.
ஏனெனில் 5 கோப்பைகளை வென்று கொடுத்த ரோகித் சர்மாவை கழற்றிவிட்ட மும்பை நிர்வாகம் ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக நியமித்தது. அதற்கு மும்பை ரசிகர்களே ஹர்திக் பாண்டியாவுக்கு எதிராக தொடர் முழுவதும் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தனர். அந்த எதிர்ப்புக்கு மத்தியில் சுமாராக விளையாடிய மும்பை பாண்டியா தலைமையில் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தை பிடித்தது.
மறுபுறம் விராட் கோலிக்கு பின் அதிக ரன்கள் அடித்த வீரராக சாதனை படைத்து போராடிய ருதுராஜ் தலைமையில் சிஎஸ்கே 7 வெற்றிகளை பெற்றது. அதனால் புள்ளிப்பட்டியலில் 5வது இடத்தை பிடித்த ருதுராஜ் தலைமையில் சென்னை முதல் வருடம் ஓரளவு நன்றாகவே செயல்பட்டது. இந்நிலையில் மகாராஷ்டிரா நகரில் எம்பிஎல் 2024 டி20 தொடர் நடைபெற்ற வருகிறது. அதில் ஜூன் 17ஆம் தேதி புனேரி மற்றும் சத்ரபதி அணிகள் மோதின.
அப்போட்டியில் புனேரி அணியின் கேப்டனான ருதுராஜ் கெய்க்வாட் முதல் முறையாக விக்கெட் கீப்பிங் செய்தது ரசிகர்களை திரும்பி பார்க்க வைத்தது. இதற்கு முன் உள்ளூர் கிரிக்கெட்டில் கூட துவக்க வீரராக மட்டுமே விளையாடிய அவர் தற்போது கேரியரிலேயே முதல் முறையாக விக்கெட் கீப்பிங் செய்யத் துவங்கியுள்ளார். குறிப்பாக இந்த வருடத்துடன் தோனி ஓய்வு பெற்றதாக கருதப்படுகிறது. முறையான அறிவிப்பு வரவில்லையென்றாலும், அடுத்த வருடத்துடன் தோனி விடை பெறுவார் என்று உறுதியாக நம்பப்படுகிறது.
எனவே மகத்தான விக்கெட் கீப்பரான தோனியின் இடத்தை சிஎஸ்கே அணியில் நிரப்புவதற்காக ருதுராஜ் இப்போதிலிருந்தே கீப்பிங் வேலையை துவங்கியுள்ளார். குறிப்பாக தோனி மற்றும் சிஎஸ்கே நிர்வாகத்தின் வழிகாட்டுதலில் அவர் கீப்பிங் செய்ய துவங்கியுள்ளார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் முழுமையாக தோனியை போல் ருதுராஜ் மாறி வருவது சிஎஸ்கே ரசிகர்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Readmore: நகைக்கடையில் சரசரவென புகுந்த 20 முகமூடி கொள்ளையர்கள்..!! சிசிடிவியில் பதிவான அதிர்ச்சி காட்சி..!!