Wow!… மிக பிரமாண்டமாக உருவாகும் அயோத்தி ரயில் நிலையம்!… ராமாயண பின்னணியில் AI தொழில்நுட்பம்!
அயோத்தி ராமர் கோயிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக அங்கு திறக்கப்பட உள்ள பிரம்மாண்டமான ரயில் நிலையத்தின் AI தொழில்நுட்ப புகைப்படங்கள் வெளியாகியுள்ள.
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் ஜனவரி மாதம் திறக்கப்பட உள்ளது. அயோத்தி ராமர் கோயிலுக்கு வரும் பயணிகளை வரவேற்க ராமர் கோயில் அறக்கட்டளை பல ஏற்பாடுகளைச் செய்துவருகிறது. இந்நிலையில் ராமர் கோயிலைக் காண வரும் பயணிகளுக்கு இந்திய ரயில்வே அதிநவீன ரயில் நிலையத்தை உருவாக்கி வருகிறது. அதாவது ராமாயணத்தை பிரதிபலிக்கும் வகையில் அயோத்தி ரயில் நிலையம் உருவாக உள்ளது. இதற்கான AI புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன.
இதற்காக அயோத்தி ரயில் நிலையத்தில் மறுசீரமைப்புப் பணிகள் 104.77 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும். இந்த ரயில் நிலைய கட்டிடத்தை இந்திய ரயில்வேயின் கீழ் இயங்கும் நிறுவனமான RITES லிமிடெட் கட்ட உள்ளது. இந்தக் கட்டுமானப் பணிகள் இரண்டு கட்டங்களாக நடைபெறும் என்று கூறப்படுகிறது. முதற்கட்டமாக, முதல் மூன்று பிளாட்பாரம்களில் வளர்ச்சிப் பணிகள் நடைபெறும். தற்போதைய சுற்றுவட்டாரப் பகுதியின் மேம்பாடு, தண்டவாளங்களை மேம்படுத்துதல் ஆகிய பணிகளும் நடக்கும்.
இரண்டாம் கட்டமாக, புதிய ரயில் நிலைய கட்டடம் மற்றும் இதர வசதிகளுக்கான பணிகள் மேற்கொள்ளப்படும். நவீன வசதிகளுடன் கூடிய புதிய ரயில் நிலையத்தின் முதல் கட்டப் பணிகள் நிறைவடைந்துள்ளன. அயோத்தியில் உலகத்தரம் வாய்ந்த ரயில் நிலையத்தின் முதல் கட்டப் பணிகளை முடிக்க சுமார் ரூ.241 கோடி செலவிடப்பட்டுள்ளது. இந்த ஸ்டேஷனில் வாகன நிறுத்துமிடம், ஊழியர்களுக்கான தங்குமிடம், ரயில்வே போலீசாருக்கான அலுவலகம், மூன்று புதிய நடைமேடைகள் என பல வசதிகள் இருக்கும். இந்த ரயில் நிலையம் ராமர் கோவில் வடிவத்திலேயே இருக்கும். ரயில் பயணிகள் இறங்கியவுடன், அயோத்தி கோயிலை அடைந்த உணர்வைத் தரும் வகையில் உருவாக்கப்படுகிறது.