For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

”உங்களுக்காக இவ்வளவு நேரம் வெயிட் பண்ணனுமா”..? சூர்யாவிடம் திடீரென சண்டை போட்ட நபர்..!! வைரலாகும் வீடியோ..!!

A video of a media person furiously arguing with Suriya at the film's press meet in Mumbai is going viral on the internet.
08:58 AM Nov 13, 2024 IST | Chella
”உங்களுக்காக இவ்வளவு நேரம் வெயிட் பண்ணனுமா”    சூர்யாவிடம் திடீரென சண்டை போட்ட நபர்     வைரலாகும் வீடியோ
Advertisement

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் நடிகர் சூர்யா. இவர் நடிப்பில் உருவாகியுள்ள கங்குவா திரைப்படம் நாளை பிரமாண்டமான முறையில் ரிலீஸ் ஆக உள்ளது. இயக்குனர் சிவா இயக்கியுள்ள இப்படத்தை கே.ஈ. ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார். இப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து திஷா பாட்னி மற்றும் பாபி தியோல் நடித்துள்ளனர். இந்நிலையில், படத்தின் ப்ரோமோஷனை இறுதிகட்டமாக படக்குழு செய்து வருகிறது.

Advertisement

மேலும், இப்படத்தில் நடிகர் கார்த்தி கேமியோ ரோலில் நடித்துள்ளார் என கூறப்படுகிறது. தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் இதுவரை வெளிவந்த பாடல்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. இதற்கிடையே, தற்போது வரை கங்குவா படம் ப்ரீ புக்கிங்கில் மட்டுமே ரூ.15 கோடி வசூல் செய்துள்ளது என கூறப்படுகிறது.

இந்நிலையில், மும்பையில் நடைபெற்ற படத்தின் பிரஸ் மீட்டில் சூர்யாவிடம் மீடியாவை சேர்ந்த நபர் ஒருவர் ஆவேசமாக வாக்குவாதம் செய்யும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. சூர்யா தாமதமாக வந்தது, நேரம் வீணானது பற்றி அந்த நபர் சண்டை போட்டுள்ளார்.

வீடியோவை காண : https://www.instagram.com/reel/DCRhIZpSC8S/?utm_source=ig_web_copy_link

ஆனால், நடிகர் சூர்யா அவரிடம் கூலாக நடந்துகொண்டு, அந்த நபரை சமரசம் செய்ய முயற்சித்தார். இந்த வீடியோ வைரல் ஆகும் நிலையில் பலரும் சூர்யாவுக்கு ஆதரவாக இணையத்தில் குரல் கொடுத்து வருகின்றனர். பாலிவுட் ஹீரோவாக இருந்தால் இப்படி எல்லாம் பேசுவார்களா? என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Read More : பான் கார்டுடன் ஆதாரை இணைத்துவிட்டீர்களா..? இந்த தேதிக்குள் வேலையை முடிச்சிருங்க..!! இல்லைனா செல்லாது..!!

Tags :
Advertisement