2025ஆம் ஆண்டு உங்களுக்கு சிறப்பாக அமைய விநாயகரை இப்படி வழிபடுங்கள்..!! சிவபெருமானுக்கு தீபம் ஏற்றுங்கள்..!!
2024ஆம் ஆண்டு முடிந்து 2025ஆம் ஆண்டு பிறக்கப்போகிறது. 2025இல் நமக்கு ஏற்பட்ட கஷ்டங்கள் அனைத்தும் நீங்கி, நிம்மதியாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ வேண்டும் என்றுதான் நினைப்போம். அப்படி நினைக்கும் பட்சத்தில் 2025 ஜனவரி 1ஆம் தேதி எந்த முறையில் விநாயகப் பெருமானுக்கு அபிஷேகம் செய்து வழிபாடு செய்தால் நமக்கு 2025 சிறப்பானதாக அமையும் என்று இந்தப் பதிவில் பார்க்கலாம்.
தமிழர்கள் பண்பாட்டில் சித்திரை 1ஆம் தேதி வருட பிறப்பாக கணக்கிடப்படுகிறது. இருப்பினும், ஜனவரி 1ஆம் தேதியும் அனைவரும் வழிபாடுகளை மேற்கொள்வார்கள். 2025ஆம் ஆண்டு சிறப்பான வருடமாக அமைவதற்கு குலதெய்வத்தையும், இஷ்ட தெய்வத்தையும் வழிபாடு செய்ய வேண்டும். இதோடு முழு முதற்கடவுளான விநாயக பெருமானையும் நாம் வழிபாடு செய்தால், அந்த வருடம் சிறப்பான வருடமாக அமையும்.
இந்த வழிபாட்டிற்கு அபிஷேகம் செய்ய சந்தன கட்டை வேண்டும். நம்முடைய கையால் சந்தன கட்டையை பன்னீர் ஊற்றி நன்றாக அரைத்து அதனுடன் ஜவ்வாது, மரிக்கொழுந்து, குங்குமப்பூவை சேர்த்து அரைக்க வேண்டும். இப்படி அரைத்த சந்தனத்தை ஒரு உருண்டையாக்கி அருகில் இருக்கக்கூடிய அரச மரத்தடி விநாயகரிடம் சென்று அவருக்கு இந்த சந்தனத்தை பயன்படுத்தி தங்களுடைய கைகளாலேயே அபிஷேகம் செய்ய வேண்டும்.
இப்படி செய்வதன் மூலம் நம் வாழ்வில் இதுவரை இருந்து வந்த கஷ்டங்கள் அனைத்தும் நீங்கும். இதோடு அன்றைய தினம் மாலை நேரத்தில் அருகில் இருக்கக்கூடிய சிவாலயத்திற்கு சென்று தங்களால் இயன்ற அளவு ஒற்றைப்படை எண்ணிக்கையில் தீபம் ஏற்றி சிவபெருமானை வழிபாடு செய்ய வேண்டும். இப்படி செய்வதால், வாழ்க்கையில் இருக்கக் கூடிய இருள் அனைத்தையும் நீக்கி ஒளிமயமான எதிர்காலத்தை சிவபெருமான் அருள்வார்.
அன்றைய தினத்தில் முடிந்த அளவுக்கு அசைவம் சாப்பிடுவதை தவிர்த்து விடுங்கள். அதே போல் மஞ்சள், சிவப்பு நிற ஆடைகளை அணிந்து கொண்டு இந்த வழிபாட்டை செய்தால், அதற்குரிய பலன் இன்னும் அதிகமாகவே இருக்கும். இந்த எளிமையான வழிபாட்டை ஜனவரி 1ஆம் தேதி முழுமனதோடு செய்து 2025ஆம் ஆண்டு சிறப்பான ஆண்டாக மாற்றிக் கொள்வோம்.
Read More : இந்த 5 பொருட்கள் வீட்டில் இருந்தால் போதும்..!! கல்லீரலை ஈசியாக சுத்தம் செய்யலாம்..!!