முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

கொரோனாவை விட மிக மோசமானது அதன் தடுப்பூசி!... எய்ம்ஸ் நிபுணர் அதிர்ச்சி!

07:26 AM Apr 11, 2024 IST | Kokila
Advertisement

Corona: கொரோனா பெருந்தொற்று மற்றும் கொரோனா தடுப்பூசி போடப்பட்ட பின், மக்களிடையே நோயெதிர்ப்பு சக்தி குறைந்து வருகிறது என்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர் ஷில்பா சர்மா அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார்.

Advertisement

2019ம் ஆண்டை யாராலும் எளிதாக மறக்க முடியாது, கொரோனா எனும் நோய் சீனாவில் தொடங்கி உலகம் முழுவதும் பரவி பெரும்பாலானோரின் வாழ்க்கையைப் புரட்டிப் போட்டது. லட்சக்கணக்கானோர் உயிரிழந்தனர். மேலும் கோடிக்கணக்கில் பாதிப்பை ஏற்படுத்தி கோரத் தாண்டவம் ஆடியது. தொற்று பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு உள்ளிட்ட அரசின் பல்வேறு நடவடிக்கைகளால் மக்கள் மனதளவில் பெரும் பாதிப்படைந்தனர். இதையடுத்து, தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. இதையடுத்து, கொரோனா பரவல் தற்போது கட்டுக்குள் இருந்தாலும், இன்றளவும் அதன் தாக்கம் இருந்துகொண்டேதான் உள்ளது.

இந்த நிலையில், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர் ஷில்பா சர்மா கூறும்போது, கொரோனா பெருந்தொற்றுக்கு பின்னர் மற்றும் கொரோனா தடுப்பூசி போடப்பட்ட பின், நோயெதிர்ப்பு சக்தி மக்களிடையே குறைந்து காணப்படுகிறது என அதிர்ச்சி தெரிவித்து உள்ளார். தொற்றில் இருந்து மீண்டு வந்துள்ள மக்கள், நோயெதிர்ப்பு சக்தி குறைந்து போன நிலையை எதிர்கொண்டுள்ளனர்.

இதனால், வைரஸ் தொற்றுகள், சளி தொற்று ஆகியவை அதிகரித்து உள்ளது. இது 3 முதல் 4 நாட்களுக்கும் மேலாக நீடிக்கும் நிலையும் உள்ளது என கூறியுள்ளார். குடல்வால் அழற்சி, பித்தப்பை அழற்சி, அழற்சி நிலைமைகள் போன்றவை அதிகரித்து உள்ளது. இதனால், தோல் அரிப்புகள் போன்ற பல ஒவ்வாமைகளும் ஏற்பட்டு உள்ளன என்று கூறியுள்ளார். நீரிழப்பால், உறைதல் ஏற்படுவதும் அதிகரித்து உள்ளது. நீங்கள் ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும்போது திடீரென மாரடைப்பு ஏற்படும் செய்திகளை கேட்டிருக்கலாம் என்றும் கூறுகிறார்.

Readmore: மக்களே குட் நியூஸ்..!! ரேஷன் அட்டையில் பெயர் இல்லையென்றாலும் பொருட்கள் கிடைக்கும்..!!

Advertisement
Next Article