உலகிலேயே மிகவும் பழமையான மலை கோயில் தமிழ்நாட்டில் உள்ளதா.? எங்கு தெரியுமா.!
உலகிலேயே குறிப்பாக தமிழ்நாட்டில் பழமையான மற்றும் தொன்மையான பல இடங்கள் மற்றும் கோயில்கள் இருந்து வருகின்றன. அவற்றில் பல்வேறு பழமையான இடங்களுக்கும் முன்னோடியாக தோன்றிய மலைக்கோயில் தமிழ்நாட்டில் உள்ள திருவண்ணாமலை கோயில்தான் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறி வருகின்றனர்.
தமிழ்நாட்டில் உள்ள மற்ற பழமையான கோயில்களை விட 260 கோடி ஆண்டுகளுக்கு முன்பாகவே தோன்றியதுதான் திருவண்ணாமலை கோயில். இந்த மலை தோன்றியது முதலே அங்குள்ள மக்கள் சிறியதாக கோயில் கட்டி வணங்கி வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
திருவண்ணாமலை கோயிலின் சிறப்பு அம்சங்கள்:
1. திருவண்ணாமலையில் பௌர்ணமி நாட்களில் அதிகமான பக்தர்கள் கிரிவலம் வருகின்றனர். ஆனால் ஐப்பசி, கார்த்திகை, மார்கழி போன்ற மாதங்களில் எல்லா நாட்களிலுமே கிரிவலம் வரலாம் என்று பெரியவர்கள் கூறி வருகின்றனர்.
2. மங்கையர்க்கரசி என்பவர் 1202 ஆம் ஆண்டு தீப தரிசன மண்டபத்தை திருவண்ணாமலை கோயிலில் உருவாக்கினார். இங்குதான் பஞ்ச மூர்த்திகள் எழுந்தருளுவர் என்பது குறிப்பிடத்தக்கது.
3. குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், குழந்தை பிறந்தால் திருவண்ணாமலை கோயிலில் அமைந்திருக்கும் கரும்பு தொட்டிலில் குழந்தையை போடுவதாக மனம் உருகி வேண்டிக் கொண்டால் கண்டிப்பாக குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது இந்த கோயிலின் நம்பிக்கை.
4. தங்கமலை ரகசியம் - உலகம் தோன்றிய காலம் முதலே திருவண்ணாமலை இருந்து வருவதாக நம் வரலாற்று புத்தகங்களிலும் இருக்கின்றது. சிவலிங்கத்தை போலவே திருவண்ணாமலை இருப்பதால் நம் முன்னோர்கள் காலத்தில் இருந்து சித்தர்கள், ஞானிகள், முனிவர்கள் போன்றவர்கள் திருவண்ணாமலை முன்பு நின்று பூஜை செய்து வழிபட்டு வந்தனர். இதனாலையே இந்த மலைக்கு தங்கமலை என்று பெயர் வந்ததாக கூறப்பட்டுள்ளது.