For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

உலகின் மிக சக்தி வாய்ந்த பாஸ்போர்ட் பட்டியலில் இந்தியா எந்த இடத்தில் உள்ளது.! முதல் இடத்தை பிடித்த நாடு எது.?!

06:56 AM Jan 12, 2024 IST | 1newsnationuser5
உலகின் மிக சக்தி வாய்ந்த பாஸ்போர்ட் பட்டியலில் இந்தியா எந்த இடத்தில் உள்ளது   முதல் இடத்தை பிடித்த நாடு எது
Advertisement

லன்டனை அடிப்படையாகக் கொண்ட ஹென்லி பாஸ்போர்ட் நிறுவனம் குடியுரிமை மற்றும் குடியிருப்பு குறித்து சர்வதேச அளவில் ஆலோசனை வழங்கி வரும் நிறுவனம் ஆகும். மேலும் டெல்லி பாஸ்போர்ட் நிறுவனம் ஒவ்வொரு வருடமும் உலகின் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட் பட்டியலை வெளியிட்டு வருகிறது.

Advertisement

இதன் படி இந்த வருடமும் உலகின் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட்டை கொண்டுள்ள நாடுகளின் பட்டியலை ஹென்லி பாஸ்போர்ட் இன்டெக்ஸ் வெளியிட்டு இருக்கிறது. 2024 ஆம் ஆண்டுக்கான இந்த பட்டியலில் ஆசிய நாடுகளான ஜப்பான் மற்றும் சிங்கப்பூரும், ஐரோப்பிய நாடுகளான இத்தாலி, ஜெர்மன், பிரான்ஸ் போன்ற நாடுகளும் இடம் பிடித்துள்ளது.

மேலும் சிங்கப்பூர், ஜப்பான் போன்ற நாடுகள் ஐந்து வருடங்களாக முதலிடத்தில் மட்டுமே இருந்து வருகிறது. இந்த பட்டியலில் இந்தியா 80 ஆவது இடத்தை பிடித்துள்ளது. கடந்த வருடமும் இதே இடத்தில் தான் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் மூலம் இந்திய குடியுரிமை பெற்றவர்கள் 62 நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்லலாம் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த பட்டியலில் முதலிடம் பிடித்த நாடுகளின் குடியுரிமை பெற்ற மக்கள் 194 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்க முடியும்.

Tags :
Advertisement