முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

உலகிலேயே மிகப்பெரிய பைரவ சிலை ஈரோட்டிலா?… பிரசாதம் முதல் அனைத்திலும் அதிசயம்!

06:56 AM Nov 23, 2023 IST | 1newsnationuser3
Advertisement

சிவனின் மறு அவதாரமாக இருக்கக் கூடியது தான் ஸ்வர்ண ஆஹர்ஷண பைரவர். பொதுவாக சிவன் கோவில்களில் கால பைரவரின் சன்னதியானது சிறிய அளவில் தெற்குநோக்கி அமைந்திருக்கும். எல்லா முக்கிய தெய்வங்களையும் வணங்கிவிட்டு பைரவரை வணங்கிவிட்டு கிளம்புவதாக இருக்கும். பைரவருக்கு தனி கோவில் என்று பார்த்தால் காசி, திருச்சி உறையூர், தொட்டியம், மயிலாடுதுதுறை, கோயம்புத்தூர் நஞசுண்டாபுரம் ,காஞ்சிபுரம் திருமாகறல், கள்ளக்குறிச்சி சின்ன சேலம், யாழ்ப்பாணத்தில் பொன்னலை போன்ற இடங்களில் உள்ளன. ஆனால் அதை விட பிரமாண்டமான ஒன்று ஈரோடு மாவட்டத்தில் உள்ளது.

Advertisement

ஈரோடு மாவட்டம், காங்கேயம் மெயின் ரோடு,அவல்பூந்துறை இராட்டைசுற்றிபாளையத்தில் அமைந்துள்ள ஸ்வர்ண ஆஹர்ஷண பைரவர் உலகில் பெரிய பைரவர் சிலையைக் கொண்டுள்ளது. சொல்லப்போனால் நீங்கள் உலகின் பெரிய பைரவர் சிலையைக் கடந்து தான் கோவிலுக்குலேயே செல்ல முடியும். இந்த கோவிலில் பைரவர் மேற்கு பார்த்து அமைந்திருப்பது தனிச்சிறப்பு. இதுவரை உலகிலேயே எங்கும் இல்லாதவாறு அறுபத்து நான்கு பைரவர்களும் ஒரே இடத்தில் இருப்பது மட்டுமல்லாது 39 அடி கால பைரவர் சிலை மிக பிரம்மாண்டமாக நிறுவப்பட்டுள்ளது. இந்த சிலை unique book of world record எனும் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த கோவிலின் இன்னொரு சிறப்பு அம்சம் என்னவென்றால் இங்கே 650 கிலோ எடையுள்ள சொர்ண ஆகர்ஷன பைரவர் சிலை ஒன்று உள்ளது. இது முழுக்க ஐம்பொன்னால் ஆனது. அதை வணங்குபவர்களுக்குப் பலன்களும் வளங்களும் கிடைத்து வருகின்றன. கர்ப்பக்கிரகத்தின் உள்ளே இருக்கும் பைரவர் சிலையினை பொதுமக்கள் தொட்டு வணங்கலாம். தாங்களே எல்லா விதமான அர்ச்சனைகளையும் அபிஷேகங்களையும் மக்கள் செய்து கொள்ளலாம். இதற்கு எந்த விதமான கட்டுப்பாடுகளும் இல்லை. அந்த வகையில் பொது மக்களின் ஆலயமாக சாதி மத இன வேறுபாடு இன்றி அனைவரும் வணங்கக் கூடிய ஆலயமாக இது உருவாகியிருக்கிறது.

இந்த கோவிலில் பச்சை நிறத்தில் மூலிகை போடி பிரசாதமாக வழங்கப்படுகிறது. மஞ்சள், கற்றாழை, வேம்பு, அரசமர இல்லை, துளசி, ஆலமர இலைகள் சேர்த்து அரைத்த போடி என்று கூறப்படுகிறது. இந்த பிரசாதம் மக்களுக்கு ஆரோக்கியத்தையும், நன்மையையும் தருவதாக நம்பப்படுகிறது.

Tags :
#erodeerode bairavar templeWorld's largest statue of Bhairavaஈரோடுஉலகிலேயே மிகப்பெரியதுபச்சை நிறத்தில் பிரசாதம்பிரசாதம் முதல் அனைத்திலும் அதிசயம்பைரவ சிலை
Advertisement
Next Article