WOW!. அடுத்த மாதம் உலக மகளிர் கபடி தொடர்!. முதல்முறையாக இந்தியாவில் நடக்கிறது!.
World Women's Kabaddi: தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான உலக மகளிர் கபடி தொடர் முதல்முறையாக இந்தியாவில் அடுத்த மாதம் நடத்தப்படவுள்ளது.
உலக அரங்கில் கபடியை பிரபலப்படுத்தவும், ஒலிம்பிக் போட்டிகளில் கபடியை சேர்க்கவேண்டும் என்ற நோக்கத்துடன் உலக கபடி தொடர் நடத்தப்படவுள்ளது. கபடிக்காக ஒருதொடர் நடத்தப்படுவது இதுவே முதன்முறையாகும். ஹரியானாவில் நடத்தப்படவுள்ள இந்த கபடி தொடரில் உலகின் 15 நாடுகளை சேர்ந்த வீராங்கனைகள் பங்கேற்கவுள்ளன.
2036ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை இந்தியாவில் நடத்த திட்டமிடப்பட்டு வருகிறது. 2036ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை இந்தியா நடத்தும்பட்சத்தில் இதில் கபடியை சேர்ப்பது தொடர்பாக சர்வதேச ஒலிம்பிக் குழுவிடம் முறையிடுவதற்கு இந்த உலக மகளிர் கபடி தொடர் உதவியாக இருக்கும். உலக கபடி அமைப்பு மற்றும் ஹரியானா அரசு இணைந்து நடத்த திட்டமிட்டுள்ள இந்த தொடரில், இங்கிலாந்து, போலாந்து, அர்ஜெண்டினா, கனடா, இத்தாலி ஆகிய நாடுகள் பங்கேற்க விருப்பம் தெரிவித்துள்ளன.