For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

Menstrual Hygiene Day 2024: "கறைகளை மறைக்க வேண்டாம்" உலக மாதவிடாய் சுகாதார தினம்..!

11:13 AM May 28, 2024 IST | Mari Thangam
menstrual hygiene day 2024   கறைகளை மறைக்க வேண்டாம்  உலக மாதவிடாய் சுகாதார தினம்
Advertisement

உலக மாதவிடாய் சுகாதார தினம் : ஒவ்வொரு ஆண்டும் மாதவிடாய் கால சுகாதாரம் குறித்த விழிப்புணர்வை பெண்களுக்கு ஏற்படுத்தும் வகையில்  மே 28ஆம் தேதி மாதவிடாய் சுகாதார தினம் அனுசரிக்கப்படுகிறது.  ஏனெனில் ஒரு மாதவிடாய் சுழற்சி சராசரியாக 28 நாட்கள் ஆகும். மேலும் ஒரு நபருக்கு பொதுவாக ஐந்து நாட்கள் மாதவிடாய் ஏற்படுகிறது. எனவே ஆண்டின் ஐந்தாவது மாதத்தின் 28 வது நாள் மாதவிடாய் சுகாதார தினமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

பண்பாட்டு ரீதியாகவும், தொழில்நுட்ப ரீதியாகவும் தினம்தினம் மாற்றங்களை நோக்கி மனித சமூகம் சென்று கொண்டிருக்கிறது. ஆனால் இன்னமும் பள்ளிகளிலும், அலுவலகங்களிலும் பொது இடங்களிலும் அந்த நாட்களை தயக்கத்துடனே கடக்கும் பெண்களின் மனநிலையில் மாற்றம் வரவில்லை.

மாதவிடாய் குறித்து வெளிப்படையாக பேசுவதில் உள்ள தயக்கத்தை போக்குவதற்கும், தவறான புரிதல்களை களையவும், சரியான விழிப்புணர்வை ஏற்படுத்தவும் ஜெர்மனியில் உள்ள வாஷ் யுனைடெட் தொண்டு நிறுவனத்தால் 2013-ம் ஆண்டு மாதவிடாய் தினம் தொடங்கப்பட்டு, 2014-ம்ஆண்டு முதல் இந்த தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

மாதவிடாய் சுகாதாரம் தினம் கட்டுக்கதைகளை உடைத்து, ஆரோக்கியமாக இருக்க, சுகாதாரத்தை பராமரிக்க மக்களை வலியுறுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மோசமான மாதவிடாய் சுகாதாரம் நிறைய உடல்நல பிரச்னைகளை ஏற்படுத்தும். இந்த ஆண்டிற்கான மாதவிடாய் சுகாதார தினத்தை கொண்டாட நாம் தயாராகி வரும் நிலையில், நாம் எப்போதும் நல்ல மாதவிடாய் சுகாதாரத்தை பராமரிக்க வேண்டிய சில காரணங்கள் இங்கே.

அசுத்தமான சானிட்டரி நாப்கின்கள் ;

பொருத்தமான மாதவிடாய் சுகாதாரப் பொருட்களைத் தேர்வு செய்யத் தவறினால் எரிச்சல், தோல் சிவத்தல், அல்லது சொறி போன்ற பிரச்சனைகளால் பாதிக்கப்படலாம். ஆகையால் உங்களுக்கு எந்த வகையான சானிட்டரி நாப்கின், டம்பான்கள், மாதவிடாய் கோப்பைகள் பொருத்தமானது என்பதை அறிந்து மருத்துவர்களின் ஆலோசனைப்படி பயன்படுத்தவும்.

அதிக சென்ட் வாசனை கொண்ட பேட்களை தவிர்க்கவும். மாதவிடாய் காலத்தில் பிறப்புறப்பு பகுதியில் வாசனை திரவியம் தெளிக்கவே கூடாது. இது பல உபாதைகளுக்கு வழி வகுக்கும். அதேபோல் உள்ளாடையை நன்றாக துவைத்து வெயில்படும் இடத்தில் காயவைத்து பயன்படுத்துவது மிக முக்கியமானது. சானிட்டரி பேட்கள் பல கவர்களில் வருகின்றன. இது பெண்களை மலட்டுத்தன்மைக்கு ஆளாக்கும் வாய்ப்பையும் ஏற்படுத்தும். எனவே சானிட்டரி நாப்கீன்களை தேர்நதெடுப்பதில் கவனம் தேவை.

எவ்வளவு நேரம் ஒரு நேப்கின் பயன்படுத்த வேண்டும் ;

பெண்கள் ஒவ்வொரு 6-8 மணி நேரத்திற்கும் தங்கள் சானிட்டரி நாப்கின்களை மாற்றாதபோது, பிறப்புறுப்பில் தடிப்புகள் மற்றும் ஈஸ்ட் தொற்றுகள் ஏற்படுகிறது. ஒரே நாப்கினை அதிகநேரம் அணிவது தீங்கு விளைவிக்கும். எனவே நல்ல நாப்கீன்களை தேர்ந்தெடுத்து, குறிப்பாக பெண்கள் மென்ஸ்ட்ரூவல் கப் அல்லது துணியில் உள்ள நாப்கீன்களை பயன்படுத்த வேண்டும்.

அதேபோன்று, மாதவிடாய் கோப்பை பயன்படுத்தினால், அதனை 8 மணி நேரத்திற்கு பிறகு அந்த கோப்பையை வெண்ணீரில் சுத்தம் செய்து மீண்டும் பயன்படுத்த வேண்டும். மேலும் டம்பான்ஸ்களை குறைந்தது 9 மணி நேரத்திற்குள் மாற்ற வேண்டும். மாதவிடாய் காலத்தில் சானிட்டரி நாப்கின்கள், கோப்பைகள், டம்பான்ஸ்களை அதற்கேற்ற நேரத்தில் அடிக்கடி மாற்றுவது நோய்க்கிருமிகள் உண்டாவதற்கான வாய்ப்பைக் குறைக்கும்.

சுத்தம் செய்வதில் கவனம் தேவை ;

சானிட்டரி நாப்கின்களை மாற்றிய பின்னர் சோப்பு போட்டு கைகளை கழுவாவிட்டால், அது ஈஸ்ட் தொற்று அல்லது ஹெபடைடிஸ் பிக்கு வழிவகுக்கும். எனவே நீங்கள் ஒவ்வொரு முறை உங்கள் பேட்களை மாற்றும்போதும் நீங்கள் கைகளை சுத்தமாகக் கழுவவேண்டும்.

ஆண்களைவிட பெண்களுக்கு பிறப்புறுப்பு தொற்றுக்கான வாய்ப்பு அதிகம். காரணம் பெண்களுக்கு ஆசன வாயும், யோனி வாயும் அருகருகே இருக்கிறது. இதனால் யோனியிலிருந்து ஆசனவாய் வரை கழுவ வேண்டும். எதிர்மறையாகக் கழுவுவதால் கிருமிகள் இன்னும் பிறப்புறுப்புக்குள் உள்ளே தள்ளப்படும் வாய்ப்புகள் அதிகம்.

அதேபோன்று, யோனியை சுத்தம் செய்ய கடினமாக ரசாயனங்களை பயன்படுத்தக் கூடாது. ஜெண்டில் சோப் எனப்படும் மிதமான சுத்திகரிப்புப் பொருட்களையே பயன்படுத்த வேண்டும். வெதுவெதுப்பான நீரில் கழுவுவது குளிப்பது மாதவிடாய் நேரத்தில் உகந்தது. இவற்றை முறையாக கடைபிடித்து நோய் தொற்றிலிருந்து விடுபடலாம்.

Read more ; இயக்குனர் ஷங்கருடன் மீண்டும் இணையும் ரஜினி..!! வரலாற்று படமாமே..!! வெளியான மாஸ் அப்டேட்..!!

Tags :
Advertisement