உலக செஸ் சாம்பியன்ஷிப்!. வெற்றிபெறுவாரா குகேஷ்?. 13வது சுற்று 'டிரா'!
World Chess Championship: உலக செஸ் தொடரின் 13வது சுற்று 'டிரா' ஆனது. வெற்றியாளரை தீர்மானிக்கும் கடைசி மற்றும் 14வது சுற்று இன்று நடைபெறுகிறது.
சிங்கப்பூரில் உலக செஸ் சாம்பியன்ஷிப் நடக்கிறது. 'கேண்டிடேட்ஸ்' தொடரில் கோப்பை வென்ற உலகின் 'நம்பர்--5' இந்தியாவின் குகேஷ் 18, 'நடப்பு உலக சாம்பியனும்', உலகின் 'நம்பர்-15' சீனாவின் டிங் லிரென் 32, விளையாடுகின்றனர். மொத்தம் 14 சுற்று நடக்கும். முதலில் 7.5 புள்ளி பெறும் வீரர், உலக சாம்பியன் ஆகலாம். முதல் 12 சுற்றுகளின் முடிவில், இருவரும் தலா 6.0 புள்ளி பெற்று சம நிலையில் இருந்தனர். நேற்று 13வது சுற்று நடந்தது. குகேஷ் வெள்ளை நிற காய்களுடன் விளையாடினார்.
துவக்கத்தில் சிறப்பாக செயல்பட்டாலும் அடுத்தடுத்து குகேஷ் தடுமாறினார். முடிவில் 68 வது நகர்த்தலில் 'டிரா' ஆனது. தற்போது இருவரும் 6.5 புள்ளியுடன் உள்ளனர். இன்று கடைசி, 14வது சுற்று நடக்கிறது. இதில் குகேஷ் கருப்பு நிற காய்களுடன் விளையாடுகிறார். இதில் வெல்லும் பட்சத்தில் இன்று உலக சாம்பியன் ஆகலாம். மாறாக போட்டி 'டிரா' ஆனால் நாளை நடக்கும் 'டை பிரேக்கரில்' வெற்றியாளர் முடிவு செய்யப்படுவார்.
Readmore: குழந்தைகளுக்கு வேகமாக பரவும் புளூ காய்ச்சல்!. சென்னையில் அதிக அளவில் பாதிப்பு!. அறிகுறிகள் இதோ!