இந்த மாவட்டங்களில் அக்-21ஆம் தேதி அனைத்து ஆலைகளிலும் வேலை நிறுத்தம்… சிஐடியு அறிவிப்பு..!
சாம்சங் போராட்டத்துக்கு தீர்வு காண கோரி காஞ்சிபுரம் செங்கல்பட்டு ஆகிய இரண்டு மாவட்டடங்களிலும் அக்டோபர் 21ஆம் தேதி அனைத்து ஆலைகளிலும் வேலை நிறுத்தம் செய்யக்கோரி சிஐடியு அறிவித்துள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார்சத்திரத்தில் இயங்கி வரும், சாம்சங் தொழிற்சாலையில் ஊழியர்கள் 8அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஒரு மாத காலமாக தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 5 முறை பேச்சுவார்த்தை நடத்தப்பட்டும் தீர்க்கமான முடிவு எட்டப்படாததால், நேற்றைய தினம் 6 ஆம் கட்ட பேச்சுவார்த்தை அமைச்சர்கள் தா.மோ. அன்பரன், சி.வி.கணேசன், டி.ஆர்.பி.ராஜா முன்னிலையில் நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை என சி.ஐ.டி.யு. மாநிலச் செயலாளர் முத்துக்குமார் தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து சாம்சங் ஊழியர்களின் போராட்டம் தொடர்ந்து வருகிறது.
ஆறு கட்ட பேசத்துவார்த்தை தொடர் தோல்வியடைந்ததை அடுத்து உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் போராட்டத்திற்கு கலந்து கொள்ள வரும் சாம்சங் ஊழியர்களை கடுமையா வாகன சோதனைகளுக்கு பிறகே அனுமதிக்கப்டுகின்றனர். இந்நிலையில் சாம்சங் ஊழியர்களின் போராட்டத்துக்கு தீர்வு காண கோரி காஞ்சிபுரம் செங்கல்பட்டு ஆகிய இரண்டு மாவட்டடங்களிலும் உள்ள அனைத்து ஆலைகளிலும் அக்டோபர் 21ஆம் தேதி வேலை நிறுத்தம் செய்யக்கோரி சிஐடியு அறிவித்துள்ளது. இவர்கள் வைக்கும் முக்கியமான கோரிக்கையை நிறைவேற்றும் பட்சத்தில் இந்த போராட்டத்தை கைவிடுவோம் என்று சி.ஐ.டி.யு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகரித்த தக்காளி விலை… குறைந்த விலையில் ரூ.65-க்கு வேன் மூலம் மத்திய அரசு சார்பில் விற்பனை…!