இறந்த அரசு ஊழியர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி...!
தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறையின் கீழ் பணிபுரிந்த போது 11.07.2016 முதல் 31.10.2023 வரை இறந்த அரசு ஊழியர்களின் வாரிசுதாரர்களில் கருணை அடிப்படையில் பணிவாய்ப்பு கோரிய விண்ணப்பங்கள் உடனடியாக முதன்மைக் கல்வி அலுவலரின் நிருவாகத்திற்குட்பட்ட பள்ளிகள் / மாவட்டக் கல்வி அலுவலகம் / வட்டார கல்வி அலுவலகங்கள் ஆகியவற்றிலிருந்து பார்வை 1 மற்றும் 3-ல் காண் அரசாணையின்படி தொகுதி "C" பணியிடங்களுக்கான நியமன அலுவலர் சார்ந்த முதன்மைக் கல்வி அலுவலர் என்பதால் நேரிடையாக கோரி பெற்று இவ்வியக்ககத்திற்கு ஆண்டு வாரியான விவரத்துடன் மற்றும் சுருக்கத்துடன் (Abstract) அனுப்பிட வேண்டும்.
அவ்வாறு ஏதாவது ஒரு ஆண்டில் அல்லது எந்தவொரு ஆண்டிலும் முதன்மைக் கல்வி அலுவலரின் நிருவாகத்திற்குட்பட்ட அலுவலகத்தில் கருணை அடிப்படையில் பணிவாய்ப்பு கோரும் கருத்துருக்கள் ஏதும் இல்லை எனில், நிலுவை ஏதும் இல்லை என 'இன்மை' அறிக்கையினை ஆண்டு விவரத்துடன் குறிப்பிட்டு நியமன அலுவலரான முதன்மைக் கல்வி அலுவலரால் சான்றளித்து தவறாது அனுப்பிட வேண்டும்.
11.07.2016 முதல் இறந்த அரசு ஊழியர்களின் விவரம் சார்ந்து இணைப்பில் கண்ட படிவத்தில் எவரது பெயரும் விடுபடாமல் பூர்த்தி செய்து இவ்வியக்ககத்திற்கு முதன்மைக் கல்வி அலுவலரின் கையொப்பத்துடன் இணை இயக்குநர் (பணியாளர் தொகுதி) அவர்களின் jdpcc2018@gmail.com என்ற|மின்னஞ்சலுக்கு அனுப்பிவிட்டு மற்றும் கையெழுத்திடப்பட்ட பிரதியினை பதிவஞ்சலில் (Hard Copy) இணை இயக்குநர் (பணியாளர்தொகுதி) அவர்களின் பெயரிட்ட முகவரிக்கு அனுப்பிட வேண்டும் என அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.