For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

'Work From Home' அரசியல்வாதியா..? 2025இல் தரமான சம்பவம் செய்யப்போகும் விஜய்..!! அதிரப்போகும் அரசியல் களம்..!!

DMK Vijay, who has made breaking the alliance his main priority, is taking on the task and moving forward with it.
10:19 AM Dec 31, 2024 IST | Chella
 work from home  அரசியல்வாதியா    2025இல் தரமான சம்பவம் செய்யப்போகும் விஜய்     அதிரப்போகும் அரசியல் களம்
Advertisement

தமிழ்நாடு அரசியல் களம் நாளுக்கு நாள் சூடுபிடித்து வருகிறது. சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு மட்டுமே உள்ள நிலையில், புத்தாண்டு நாளை பிறக்கிறது. ஆளுங்கட்சியான திமுகவை வீழ்த்தியே ஆக வேண்டும் என்ற முழு மூச்சில் அதிமுக, பாஜக பணியாற்றி வருகிறது. இந்த பட்டியலில் தற்போது புதிதாக இணைந்திருப்பவர் நடிகர் விஜய்.

Advertisement

அவரின் அரசியல் வருகை ஒட்டுமொத்த தமிழக அரசியலிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தி.மு.க., பா.ஜ.க.வே தனது பிரதான எதிரிகள் என்று விஜய் அறிவித்துள்ள நிலையில், அதற்கேற்றாற்போலவே காய் நகர்த்தி வருகிறார். ஆனால், பொதுவெளியில் மக்களைச் சந்திக்காதது, ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்திக்காதது போன்ற காரணத்தால் பனையூர் பண்ணையார், ஒர்க் ப்ரம் ஹோம் அரசியல்வாதி என்று விமர்சிக்கப்பட்டு வருகிறார்.

இந்த சூழலில் யாரும் எதிர்பாராத வகையில், அண்ணா மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் விஜய் ஆளுநரை சந்தித்து மனு அளித்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக விஜய் கைப்பட எழுதிய கடிதம் ஒன்றை வெளியானது. மகளிர் வாக்குகளை கவரும் வகையில் தன்னை பெண்களின் பாதுகாவலனாக, அண்ணனாக முன்னிறுத்தி இந்த கடிதத்தை அவர் எழுதியிருந்தார்.

இந்த நிலையில், ஒட்டுமொத்த அரசியல் களத்திலும் தன்னை வலுவான அரசியல்வாதியாக காட்டிக்கொள்ள விஜய் 2025ஆம் ஆண்டு பல திட்டங்கைளச் செயல்படுத்தவுள்ளார். அதன் முதல்படியாக, ஒர்க் ப்ரம் ஹோம் அரசியல்வாதி என்ற விமர்சனத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க முடிவு செய்து, தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணத்தை மேற்கொள்ள உள்ளார். இந்த சுற்றுப்பயணம் ஜனவரி மாத இறுதியிலோ அல்லது தவெக-வின் 2-வது ஆண்டு தொடக்க விழாவிற்கு பிறகோ இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது தனது கடைசி படத்தில் தீவிரமாக நடித்து வரும் விஜய், அதன் பணிகளை விரைந்து முடிக்க படக்குழுவிடம் அறிவுறுத்தியுள்ளார். இந்த சுற்றுப்பயணத்தில் மக்களை நேரடியாக சந்திப்பதால் தனது அரசியல் செல்வாக்கு அதிகரிக்கும் என்பதே விஜய்யின் வியூகம் ஆகும். இந்தியாவின் பல மாநிலங்களிலும் இந்த அரசியல் சுற்றுப்பயணம் என்பது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அது தனக்கும் கைகொடுக்கும் என்று விஜய் நம்பிக்கையுடன் உள்ளார்.

மக்கள் சந்திப்பு மட்டுமின்றி அரசியல் களத்தில் அடிக்கடி இனி விஜய்யை 2025ஆம் ஆண்டு காணலாம் என்றும் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். அது மட்டுமின்றி தி.மு.க. கூட்டணியை உடைப்பதையே தனது பிரதான முதல் கடமையாக வைத்துள்ள விஜய், அதற்கான பணிகளையும் கையில் எடுத்து காய் நகர்த்தி வருகிறார்.

Read More : பொங்கல் பண்டிகைக்கு தொடர்ந்து 9 நாட்களுக்கு விடுமுறையா..? மாணவர்கள், அரசு ஊழியர்கள் மகிழ்ச்சி..!! வெளியாகும் அறிவிப்பு..?

Tags :
Advertisement