For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

பிரபல ஐடி நிறுவனத்தில் கொட்டிக் கிடக்கும் வேலை..!! வீட்டிலிருந்தே பணிபுரியலாம்..!! இவ்வளவு வசதிகளா..?

One of the famous IT company Liventus has released a new notification regarding working from home.
10:14 AM Jun 10, 2024 IST | Chella
பிரபல ஐடி நிறுவனத்தில் கொட்டிக் கிடக்கும் வேலை     வீட்டிலிருந்தே பணிபுரியலாம்     இவ்வளவு வசதிகளா
Advertisement

பிரபல ஐடி நிறுவனங்களில் ஒன்றாக Liventus-இல் வீட்டில் இருந்தே வேலை செய்வது தொடர்பான புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Advertisement

பெங்களூரு ஜேபி நகரில் லிவென்டஸ் (Liventus) நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனம் அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இந்தியாவில் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் முழுநேர தொழில்நுட்பம் சார்ந்த சர்வீஸ் மற்றும் தீர்வுகளை வழங்கி வருகிறது. குறிப்பாக, Custom Software Development மற்றும் Business Process Automation சேவைகளில் முன்னணியில் உள்ளது. இந்நிலையில் தான் தற்போது புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதன்படி, லிவென்டஸ் நிறுவனத்தில் Ul/UX Designer பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணியை விரும்புவோர் தொடர்புடைய துறையில் டிகிரி முடித்திருக்க வேண்டும். அல்லது Ul/UX Designer-ல் அனுபவம் இருக்க வேண்டும். டிசைன் தொடர்பான புதிய தொழில்நுட்பத்தை அறிந்து வைத்திருக்க வேண்டும். ஆங்கிலத்தில் பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும்.

பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்கள் 'வொர்க் ஃப்ரம் ஹோம்' அடிப்படையில் வீட்டில் இருந்தே பணி செய்யலாம். தற்போதைய அறிவிப்பின்படி சம்பளம் பற்றிய விவரம் தெரிவிக்கப்படவில்லை. விண்ணப்பம் செய்து பணிக்கு தேர்வாகும் போது திறமை, பணி அனுபவம் அடிப்படையில் சம்பளம் நிர்ணயிக்கப்பட உள்ளது. அதோடு குரூப் மெடிக்கிளைம் பாலிசி, பேரன்ட்டல் இன்சூரன்ஸ் கவரேஸ், விபத்து காப்பீடு, பிஎஃப், Gratuity, ஓவர் டைம் போனஸ், சம்பளத்துடன் கூடிய விடுமுறை, லாபத்தில் இருந்து பகிர்ந்து அளிக்கப்படும் Incentives உள்ளிட்டவை வழங்கப்படும். விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி குறிப்பிடப்படாததால் முடிந்தவரை விரைவாக விண்ணப்பம் செய்வது நல்லது.

Read More : உங்கள் நுரையீரலை ஆரோக்கியமாகவும், பாதுகாப்பாகவும் வைத்துக் கொள்ள சூப்பர் டிப்ஸ்..!! இதை மட்டும் பண்ணுங்க..!!

Tags :
Advertisement