நீதிமன்றம் பிறப்பிக்கும் பிடிவாரண்டுகளை முறையாக அமல்படுத்த மாட்டீங்களா..? இப்படி செய்தால் வழக்கை எப்படி விரைந்து முடிக்க முடியும்..?
நீதிமன்றம் பிறப்பிக்கும் பிடிவாரண்டுகளை முறையாக அமல்படுத்தாதது ஏன்..? என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
குற்ற வழக்கு ஒன்றில் கைதான வடிவேல் என்பவர், தனக்கு ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன்பாக நேற்று (ஜனவரி 22) விசாரணைக்கு வந்தது. அப்போது, காவல்துறை தரப்பில் குற்றவியல் வழக்கறிஞர் அருள்செல்வம் ஆஜரானார்.
பிடிவாரண்டுகளை முறையாக அமல்படுத்த மாட்டீங்களா..?
தற்போது கைது செய்யப்பட்டுள்ள வடிவேல் மீது பல்வேறு காவல் நிலையங்களில் குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது. ஏற்கனவே பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டு தலைமறைவாக இருந்த இவர், கடந்தாண்டுதான் கைது செய்யப்பட்டார். எனவே, வடிவேலுவுக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என வழக்கறிஞர் அருள்செல்வம் வாதிட்டார். அப்போது திடீரென குறுக்கிட்ட நீதிபதி, தலைமறைவாக உள்ளவர்களுக்கு எதிராக பிறப்பிக்கப்படும் பிடிவாரண்டுகளை காவல்துறையினர் ஏன் முறையாக அமல்படுத்தவில்லை..? என கேள்வி எழுப்பினார்.
இதேநிலை நீடித்தால் விசாரணை நீதிமன்றங்கள் எப்படி வழக்கை துரிதமாக விசாரித்து முடிக்க முடியும்..? என்று கேள்வி எழுப்பினார். காவல் நிலையங்களுக்கு இடையே போதுமான ஒருங்கிணைப்பு இல்லாததால் தான், இவ்வாறு இருப்பதாக நீதிபதி தெரிவித்தார். இந்நிலையில், பிடிவாரண்டுகளை முறையாக அமல்படுத்தாதது ஏன்..? என கீழ்ப்பாக்கம் துணை ஆணையர் இன்று நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தார்.
Read More : ”தமிழ்நாட்டிற்கே பெருமை”..!! இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறார் முதலமைச்சர் முக.ஸ்டாலின்..!!