முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

மகளிர் உரிமைத்தொகை..!! செம குட் நியூஸ் சொன்ன உதயநிதி..!! விரைவில் உங்களுக்கும் ரூ.1,000 வரப்போகுது..!!

Deputy Chief Minister Udayanidhi Stalin has said that Rs.1,000 will be given to all eligible women who are left out soon.
03:23 PM Oct 19, 2024 IST | Chella
Advertisement

தமிழ்நாடு அரசு கடந்தாண்டு செப்டம்பர் மாதம் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை தொடங்கி செயல்படுத்தி வருகிறது. ஒரு கோடி பயனாளர்களை இலக்காகக் கொண்டு பொருளாதாரத் தகுதிகள் வரையறுக்கப்பட்டன. ஆனால், ஒரு கோடிக்கும் மேற்பட்டோர் அரசு அறிவித்த பொருளாதாரத் தகுதிப் பட்டியலுக்குள் வந்தனர். அவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது.

Advertisement

முதற்கட்டமாக 1 கோடியே 6 லட்சத்து 52 ஆயிரம் பேருக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட்டது. நிராகரிக்கப்பட்டவர்கள் மீண்டும் மேல்முறையீடு செய்த நிலையில், ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு தொடர்ந்து பயனாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு வந்தது. சுமார் 1 கோடியே 15 லட்சம் பயனாளர்கள் இணைக்கப்பட்டிருந்த நிலையில், மீண்டும் 1.48 லட்சம் பேர் சேர்க்கப்பட்டனர்.

தற்போது 1 கோடியே 16 லட்சம் பேர் பயனாளர்களாக இணைக்கப்பட்டுள்ள நிலையில், பலர் இன்னும் திட்டத்தில் இணையாமல் உள்ளனர். 2 கோடியே 24 லட்சத்துக்கும் அதிகமான ரேஷன் அட்டைகள் உள்ள நிலையில், 1 கோடிக்கும் அதிகமானோர் திட்டத்தில் இணைய முடியாமல் உள்ளனர். உரிமைத் தொகை திட்ட விண்ணப்பப் பதிவு முகாமை மீண்டும் நடத்த வேண்டும், பொருளாதார தகுதியில் தளர்வுகளை அறிவிக்க வேண்டும் என்று தொடர்ந்து மக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இந்நிலையில், விடுபட்ட அனைத்து தகுதியுள்ள பெண்களுக்கும் ரூ.1,000 விரைவில் வழங்கப்படும் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 1.16 கோடி பயனர்களுக்கு உரிமைத்தொகை வழங்கப்பட்டு வருவதாக கூறிய அவர், தகுதியுள்ள அனைவருக்கும் ரூ.1,000 வழங்கப்படும். புதிதாக ரேஷன் கார்டு வாங்கியவர்கள் மகளிர் உரிமைத்தொகை பெற விண்ணப்பிக்க காத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Read More : ரிஷப ராசியில் பயணிக்கும் குருபகவான்..!! பணத்தை குவிக்க போகும் 3 ராசிக்காரர்கள்..!! திருமணமும் கைகூடும்..!!

Tags :
உதயநிதி ஸ்டாலின்தமிழ்நாடு அரசுமகளிர் உரிமைத்தொகை
Advertisement
Next Article