மகளிர் உரிமைத்தொகை இன்னும் கிடைக்கவில்லையா..? விண்ணப்பிக்க மீண்டும் ஓர் வாய்ப்பு..!! மிஸ் பண்ணிடாதீங்க..!!
தமிழ்நாட்டில் மகளிர் உரிமைத்தொகை திட்டம், குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் 1.16 கோடி பெண்கள் இத்தொகையை பெறுகிறார்கள். இத்திட்டம் அரசின் பிரதான திட்டமாக மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் பெருமையை வெளிப்படுத்துகிறது. சில பெண்கள், தங்கள் தகுதிகளுடன் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கவில்லை.
அப்படி விண்ணப்பித்தாலும், அது தவறுதலாக இருந்ததால் நிராகரிக்கப்பட்டது. இந்நிலையில், தற்போது அவர்கள் மீண்டும் விண்ணப்பிக்கும் வாய்ப்பு பெறுவர். அதிகாரப்பூர்வ தகவலின் படி, மாவட்டங்கள் வாரியாக உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு, தகுதியான பெண்கள் விண்ணப்பிக்க முடியும். திட்டத்திற்கு தகுதியான பெண்களுக்கு, ஆண்டுக்கு ரூ.2.5 லட்சத்திற்குள் வருமானம் இருக்கும் குடும்ப தலைவிகள், 5 ஏக்கருக்குக் குறைவான நிலம் அல்லது 10 ஏக்கருக்குக் குறைவான புன்செய் நிலம் கொண்ட குடும்பத் தலைவிகள் விண்ணப்பிக்கலாம்.
இந்த திட்டத்தில் இணைந்து ரூ.1,000 பெற விரும்புவோர், 21 வயதுக்கு மேற்பட்ட பெண்கள், செப்டம்பர் 15, 2002-க்கு முன்னர் பிறந்தவர்கள் மட்டுமே தகுதி பெற்றவர்கள். இத்திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த அரசு தீவிர கவனம் செலுத்தி, மாநில அளவில் கண்காணிப்பு குழு அமைத்து, அதிகாரப்பூர்வ தளத்தின் மூலம் விண்ணப்பங்களை ஏற்கிறது.
Read More : சிறுமியுடன் பலமுறை பலாத்காரம்..!! தாலி கட்டி அடிக்கடி செக்ஸ் டார்ச்சர் கொடுத்த இளைஞர்..!! பகீர் சம்பவம்..!!