ரூ.1,000 மகளிர் உரிமைத்தொகை..!! சூப்பர் அறிவிப்பை வெளியிடும் தமிழ்நாடு அரசு..!!
மகளிர் உரிமைத் தொகை திட்டம் மேலும் விரிவாக்கம் செய்யப்பட இருக்கிறது. அதன்படி, தற்போது இத்திட்டத்தில் உள்ள அனைத்து கட்டுப்பாடுகளும் நீக்கப்பட வாய்ப்புள்ளது. அதாவது, அரசு, கார்ப்பரேஷன் பணியில் உள்ள பெண்கள் தவிர, மற்ற அனைவருக்கும் இந்த பணம் வழங்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், இதற்காக மகளிர் தற்போது புதிதாக யாரும் விண்ணப்பிக்கத் தேவையில்லை என்று அரசு தரப்பு வட்டாரங்கள் கூறுகின்றன.
மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என சமூக வலைதளத்தில் பரவிய வதந்தியை நம்பி வேண்டாம். பெண்கள் யாரும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டாம். ஏற்கனவே முன்னாள் அரசு ஊழியர்களின் மனைவிகள், கார்ப்பரேஷன் ஊழியர்களின் மனைவிகள் ஆகியோருக்கு இந்த திட்டத்தில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பென்ஷன் பெறக்கூடிய பெண்கள், அரசின் வேறு நிதிகளை வங்கியில் பெற கூடிய பெண்களுக்கு பணம் வழங்கப்படவில்லை. இவர்களுக்கு திட்டம் விரிவாக்கம் செய்யப்படும் போது அதற்கான அறிவிப்புகள் வரலாம்.
வேறு சில ஆவணங்கள் சரியாக இல்லாத பெண்களுக்கும் இதுவரை ரூ.1,000 வழங்கப்படவில்லை, அரசின் வேறு நிதிகளை வங்கியில் பெற கூடிய பெண்களுக்கு இப்போது இல்லாமல் எதிர்காலத்திலும் வாய்ப்பு வழங்கப்படலாம். மாறாக ஆவணங்கள் சரியில்லாத பெண்கள், இனி திருமணமாகி குடும்ப தலைவி ஆகும் பெண்கள் ரூ.1000 பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம். ஆனால், இப்போது முடியாது என்றாலும் அடுத்த சில மாதங்களுக்கு பின் திட்டத்தை விரிவாக்கம் செய்வது தொடர்பான அறிவிப்பு வெளியாகலாம். அப்போது விடுபட்டவர்கள் விண்ணப்பங்களை மேற்கொள்ளலாம்.
Read More : MLA வீட்டின் முன்பு தீக்குளித்த திமுக நிர்வாகி..!! சிகிச்சை பலனின்றி இன்று மரணம்..!!