For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

மகளிர் உரிமைத் தொகை..‌.! அவசியம் கருதி குடும்ப அட்டைகள் விரைவில் வழங்கப்படும்...! அமைச்சர் தகவல்...!

06:30 AM Feb 08, 2024 IST | 1newsnationuser2
மகளிர் உரிமைத் தொகை  ‌   அவசியம் கருதி குடும்ப அட்டைகள் விரைவில் வழங்கப்படும்     அமைச்சர் தகவல்
Advertisement

மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் பயன் பெற புதிய ரேஷன் அட்டைகள் கேட்டு பலர் விண்ணப்பித்து வந்தனர். கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் தற்போது வரை புதிய அட்டைகள் விநியோகிக்கப்படவில்லை. மகளிர் உரிமைத் தொகை திட்டப் பணிகளில் ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டதால் புதிய ரேஷன் அட்டைகள் வழங்குவது நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் புதிய ரேஷன் அட்டை வழங்குவது தொடர்பாக விரைவில் முடிவு எடுக்கப்படும் என அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.

Advertisement

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்; குடும்ப அட்டைகளை உணவுத்துறை வழங்குகிறது. கடைகளை கூட்டுறவுத் துறை நடத்தி வருகிறது. கடந்த ஓராண்டாக குடும்ப அட்டை வழங்கப்படவில்லையே. கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்காக பலர் புதிதாக குடும்ப அட்டைகளுக்கு விண்ணப்பித்தார்கள். ஆகவே, குறிப்பிட்ட காலத்துக்கு குடும்ப அட்டை விநியோகத்தை நிறுத்திவைக்க முடிவெடுக்கப்பட்டது. எனவே, சில ஆய்வுகள் மேற்கொண்ட பிறகு அதன் அவசியம் கருதி குடும்ப அட்டைகள் விரைவில் வழங்கப்படும் என அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசு ஏழை, எளிய மக்களின் நலனுக்கான பல்வேறு திட்டங்களை கூட்டுறவுத் துறையின் மூலம் செயல்படுத்தி வருகிறது. அதன்படி, நடப்பாண்டில் கடந்த ஜன.31-ம் தேதி வரை 15,87,522 விவசாயிகளுக்கு பயிர் கடனாக ரூ.13,364.75 கோடி வழங்கப்பட்டுள்ளதாக கூறினார்.

Tags :
Advertisement