WPL: இன்று தொடங்குகிறது மகளிர் பிரீமியர் லீக் போட்டிகள்!… மும்பை - டெல்லி அணிகள் மோதல்!
மகளிர் பிரீமியர் லீக்கின் 2வது சீசன் இன்று தொடங்குகிறது. முதல் போட்டியில் மும்பை - டெல்லி அணிகள் மோதுகின்றன.
இந்தியாவில் நடைபெற்று வரும் லீக் போட்டிகள் தொடக்கத்தில் ஆண்கள் விளையாடுவதற்கு மட்டும் நடத்தப்பட்ட லீக் போட்டி, தற்போது பெண்களுக்கும் நடத்தப்படுகின்றது. இதற்கான வரவேற்பு எதிர்பார்க்கப்பட்டதை விடவும் அதிகமாக இருந்ததால், இரண்டாவது சீசன் இந்த ஆண்டு நடத்தப்படுகின்றது. கடந்த ஆண்டு அறிமுகப் படுத்தப்பட்ட WPL லீக் தொடரானது, நடப்பாண்டுக்கான முதல் ஆட்டம் இன்று தொடங்கவுள்ளது. மார்ச் 17ஆம் தேதி வரை நடைபெறும் இந்த WPL 2024இல் மொத்தம் 5 அணிகள் களமிறங்குகின்றன.
பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்கவுள்ள முதல் போட்டியில் நடப்புச் சாம்பியன் ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணி மோதவுள்ளது. டெல்லி கேபிடல்ஸ் அணியை மெக் லேனிங் வழிநடத்துகிறார். இவர் ஆஸி., மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் என்பது குறிப்பிடத்தக்கது. முழு சீசனும் பெங்களூரு மற்றும் டெல்லியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு மும்பை, நவி மும்பையில் நடந்தது.
இந்த ஆண்டு டபிள்யூ.பி.எல் தொடரில் மொத்தம் 22 போட்டிகள் நடைபெறும், இதில் புள்ளிப் பட்டியலில் முதலிடம் பிடிக்கும் அணிகள் நேரடியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறும். 2-வது மற்றும் 3-வது இடங்களை பிடிக்கும் அணிகள் எலிமினேட்டர் சுற்றில் மோதும். அதில் ஜெயிக்கும் அணி பைனலுக்கு முன்னேறும். அனைத்து போட்டிகளையும் ஜியோ சினிமாவில் கண்டு ரசிக்கலாம். ஸ்போர்ட்ஸ் 18 சேனலிலும் நேரலையில் ஒளிபரப்பாகிறது.
English summary:Women's Premier League starts today
Readmore:IPL 2024 அட்டவணை வெளியானது..!! முதல் போட்டியே சென்னையில் தான்..!! CSK vs RCB..!! எப்போது தெரியுமா..?