மகளிர் உரிமை தொகை!… விடுபட்டவர்கள் ஜனவரியில் விண்ணப்பிக்கலாம்!… அமைச்சர் அறிவிப்பு!
மகளிர் உரிமைத்தொகை பெற தகுதி இருந்தும் விடுபட்டவர்கள் மீண்டும் விண்ணப்பிக்கலாம் என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி பேரூராட்சி மற்றும் ஒன்றியங்களில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, தற்போது நான் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் பெரும்பாலான பெண்கள் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் பற்றி கேள்வி கேட்கின்றனர். கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் தகுதியான பயனாளிகள் யாரும் விடுபட்டு விடக்கூடாது என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது உதவித்தொகையாக அல்ல. உரிமைத்தொகையாக வழங்குகிறோம். கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெற தகுதியிருந்தும் இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் ஜனவரி முதல் மீண்டும் விண்ணப்பிக்கலாம். இதே போல் மேல்முறையீடும் செய்யலாம். விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி பேரூராட்சி போன்ற பகுதிகளுக்கு 100 நாள் வேலை திட்டம் வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
ஆனால் மத்திய அரசு நிதி ஒதுக்குவதில்லை. இது தொடர்பாக விருதுநகர் மாவட்ட ஆட்சியரும் டெல்லிக்கு சென்று அதிகாரிகளை சந்தித்து 100 நாள் வேலை திட்டத்திற்கு நிதி ஒதுக்குவது குறித்து பேசி வந்துள்ளார். அதனால் மத்திய அரசிடம் இருந்து நிதி வர வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம் என்று அமைச்சர் கூறினார்.