பெண்களுக்கு மாதம் ரூ.3,000 வழங்கப்படும்...! மகாராஷ்டிரா காங்கிரஸ் கட்சியின் தேர்தல் வாக்குறுதி...!
பெண்களுக்கு மாதம் ரூ.3,000 வழங்கப்படும் என மகாராஷ்டிரா சட்டப் பேரவைத் தேர்தல் அறிக்கையில் காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது.
மகாராஷ்டிராவில் வரும் 20-ம் தேதி நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலுக்கான பிரசாரத்தை காங்கிரஸ் கட்சி தொடங்கி உள்ளது. இந்த நிலையில் கட்சியின் முக்கிய தேர்தல் வாக்குறுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு மாதம் ரூ3,000 மற்றும் இலவசப் பேருந்து பயணம், விவசாயிகளுக்கு ரூ.3 லட்சம் வரை கடன் தள்ளுபடி, சாதி வாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தி 50 சதவீத இடஒதுக்கீடு வரம்பை நீக்குதல், வேலையில்லாத இளைஞர்களுக்கு மாதம் ரூ.4,000 உள்ளிட்ட வாக்குறுதிகளை அறிவித்துள்ளது காங்கிரஸ் கட்சி.
முதல்வர் ஏக்நாத் ஷிண்டே வாக்குறுதி
காவல்துறை வேலைக்கு 25,000 பெண்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்யப்படும். தற்போது ஒவ்வோர் ஆண்டும் விவசாயிகளுக்கு வழங்கப்படும் ரூ.12,000 தேர்தலுக்கு பிறகு 15,000 ரூபாயாக அதிகரிக்கப்படும். அதோடு விவசாய விளைபொருட்களுக்கு வழங்கப்படும் குறைந்த ஆதாய விலையில் 20 சதவீதம் மானியமாக வழங்கப்படும்.
மாநிலத்தில் புதிதாக 25 லட்சம் வேலை வாய்ப்பு ஏற்படுத்தப்படும் என்றும், பெண்களுக்கு தற்போது ஒவ்வொரு மாதமும் வழங்கப்படும் ரூ.1,500 தேர்தலுக்கு பிறகு 2,100 ஆக அதிகரித்து வழங்கப்படும்.அனைத்து வகையான மின் இணைப்புகளுக்கும் மின் கட்டணத்தில் 30 சதவீத சலுகை" உட்பட பல்வேறு சலுகைகளை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அறிவித்தார்.