For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பாத பெண்கள்!. விரைவில் இந்த நாடுகள் அழிந்துவிடும்!. எலான் மஸ்க் ட்வீட்!

06:09 AM Dec 07, 2024 IST | Kokila
குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பாத பெண்கள்   விரைவில் இந்த நாடுகள் அழிந்துவிடும்   எலான் மஸ்க் ட்வீட்
Advertisement

Elon Musk: வரலாற்றில் எங்கும் இல்லாத அளவுக்கு சிங்கப்பூரில் குழந்தை பிறப்பு விகிதம் குறைந்துள்ளதாகவும், பலரும் ஒரு குழந்தை கூட பெறுவதில்லை என்றும் எலான் மஸ்க் பதிவிட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

இதுதொடர்பாக உலகின் பிரபல தொழிலதிபரும், எக்ஸ் தள உரிமையாளருமான எலான் மஸ்க் தனது எக்ஸ் தளத்தில், சிங்கப்பூரில் குழந்தை பிறப்பு விகிதம் வெகுவாகக் குறைந்திருப்பதாக வெளியானத் தகவலை மேற்கோள்காட்டி சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகள் விரைவில் அழிந்து விடும் என்று கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தார். இதற்கு மரியோ நாவ்பால் என்பவர், சிங்கப்பூரின் குழந்தை பிறப்பு விகிதம் குறைந்திருப்பது தொடர்பான தகவலை வெளியிட்டிருந்த எக்ஸ் தள பதிவுக்கு பதிலளிக்கும் விதமாக எலான் மஸ்க் சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகள் விரைவில் அழியப்போகின்றன என பதிவிட்டிருந்தார்.

https://twitter.com/elonmusk/status/1864489818706915771?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1864489818706915771%7Ctwgr%5Ec2f6ae3c00c08e58b9cdb530b52938bdc7611c68%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.dailythanthi.com%2Fnews%2Fworld%2Fare-countries-including-singapore-going-to-disappear-elon-musk-1133854

கடந்த பல பத்தாண்டுகளில் சிங்கப்பூரின் குழந்தை பிறப்பு விகிதமானது பெரிய அளவில் சரிந்துவந்துள்ளது. கடந்த 2023ஆம் ஆண்டு சிங்கப்பூரின் குழந்தை பிறப்பு விகிதமானது வரலாற்றில் எங்கும் இல்லாத அளவுக்கு 0.97 ஆக குறைந்துள்ளது. இது 1.0க்கும் குறைவாக குழந்தை பிறப்பு விகிதம் குறைந்திருப்பது முதல் முறையாகும். அதாவது, ஒரு பெண் ஒன்றுக்கும் குறைவான குழந்தைகளையே பெற்றுக்கொள்கிறார்கள் என்றால், பலரும் ஒரு குழந்தை கூட பெறுவதில்லை என்பதை குறிக்கிறது.

https://twitter.com/MarioNawfal/status/1864489078206484729?

இதனால் சிங்கப்பூரில் வயதானவர்கள் மிக அதிகம் இருப்பர், தொழிலாளர்கள் வீதம் குறைவாக இருக்கும், மனித வளம் குறைந்துவிடும். தொழிற்சாலை முதல் உணவு வினியோகம் அனைத்தும் பெரிதும் பாதிக்கப்படும் என்று மரியோ நாவ்பால் பதிவிட்டிருந்தார். ஒரு பெண் தனது முதல் குழந்தையை பெறும் வயதான 25 -34 வரை பெரும்பாலும் திருமணமாகாமல் இருப்பதால், 20 வயதில் குழந்தை பெறும் பெண்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Readmore: சிரியாவை கைப்பற்றிய கிளர்ச்சியாளர்கள்!. இந்தியர்களுக்கு எச்சரிக்கை!. உதவி எண்கள் அறிவிப்பு!. மத்திய அரசு அதிரடி!

Tags :
Advertisement