For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

புதன்கிழமை அன்று பெண்கள் இதை செய்தால், வீட்டில் உணவுக்கு பஞ்சம் இருக்காது..! செல்வம் செழிக்கும்..!

07:27 AM Feb 07, 2024 IST | 1newsnationuser5
புதன்கிழமை அன்று பெண்கள் இதை செய்தால்  வீட்டில் உணவுக்கு பஞ்சம் இருக்காது    செல்வம் செழிக்கும்
Advertisement

பொதுவாக ஜோதிட சாஸ்திரத்தின் படி ஆண்களுக்கும், பெண்களுக்கும் தனித்தனியே முறையாக ஒரு சில விஷயங்களை பின்பற்றக் கூறி அறிவுறுத்தப்பட்டு வருகின்றது. இதை நம் முன்னோர்களும் பின்பற்றி நல்வாழ்வு வாழ்ந்து வந்தனர். இதன்படி தற்போது புதன்கிழமை அன்று பெண்கள் இந்த குறிப்பிட்ட விஷயங்களை செய்தால் உடலுக்கும், மனதுக்கும் ஆரோக்கியம் ஏற்படுவதன் மூலம் வாழ்வில் முன்னேற்றம் ஏற்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement

1. சமையலறையில் சமைக்க பயன்படும் பொருட்கள் தீர்ந்து விட்டது என்றால் புதன்கிழமை அன்று புதிதாக வாங்கி நிரப்பி வைக்கலாம். இவ்வாறு செய்யும்போது எப்போதுமே உணவுக்கு பஞ்சம் இருக்காது என்று கூறப்பட்டுள்ளது.
2. சமையல் மற்றும் பூஜை அறையில் பயன்படுத்தப்படும் எண்ணெய் வகைகளை புதன்கிழமை அன்று வாங்கி பயன்படுத்தும் போது வீட்டில் அதிர்ஷ்டம் ஏற்படும்.
3. வீட்டில் உள்ள பழைய பொருட்களை புதன்கிழமை அன்று வெளியில் தூக்கி எறிய கூடாது.
4. புதிய பொருட்கள் வாங்குவது என்றாலும் புதன்கிழமை அன்று வாங்கி சேர்த்து வைத்தால் வீட்டில் மேன்மேலும் பொருட்கள் சேரும்.
5. வீட்டில் தங்கம், வெள்ளி நகைகள் வாங்குவதாக இருந்தால் புதன் கிழமையில் நல்ல நேரத்தில் வாங்க வேண்டும்.
6. புதன் கிழமை அன்று வீட்டில் என்ன சமையல் செய்தாலும் கீரையை உணவில் சேர்த்து கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு நன்மையை ஏற்படுத்தும்.
7. புதன் கிழமை அன்று பால் பொருட்களை அதிகம் உபயோகப்படுத்த கூடாது. இது வீட்டில் தரித்திரத்தை ஏற்படுத்தும்.
8. பச்சை வாழை பழத்தை வாங்கி பூஜை அறையில் வைத்து நெய் தீபம் ஏற்றி வழிபட குடும்ப ஒற்றுமை அதிகரிக்கும். கணவன், மனைவி ஒற்றுமை பெருகும்.

Tags :
Advertisement