பெண்கள் மேலாடையின்றி நீச்சல் குளத்தில் குளிக்க அனுமதி..!! எங்கு தெரியுமா..?
கடந்த 2020ஆம் ஆண்டு ஸ்பெயின் நாட்டு அரசு நீச்சல் குளங்களில் பெண்கள் மேலாடையின்றி குளிக்க அனுமதி வழங்கி, சட்டம் இயற்றியது. ஆனால், சில நகராட்சி இச்சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் இவை நிறுத்தி வைக்கப்பட்டது. ஆனால், பெண்கள் மேலாடையின்றி குளிக்கலாம் என்று ஸ்பெயின் அரசு அனுமதி கொடுத்து உத்தரவிட்டது.
இந்நிலையில், ஜெர்மனி தலைநகர் பெர்லினில் உள்ள பொது நீச்சல் குளங்களில் ஆண்களைப் போல பெண்களும் மேலாடை இன்றி குளிக்கலாம் என்று அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஜெர்மனியை சேர்ந்த பெண் ஒருவர் மேலாடையின்றி சூரிய குளியல் செய்ததற்காக பொது நீச்சல் குளத்தில் இருந்து அவர் வெளியேற்றப்பட்டார். இதனைத் தொடர்ந்து ஆண்களுக்கு ஒரு நீதி தங்களுக்கு ஒரு நீதியா என்று அந்தப் பெண் முறையிட்டதை தொடர்ந்து நகர நிர்வாகம் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.
Read More : எப்போதுமே மகிழ்ச்சியாக இருக்க இதை மறக்காம பண்ணுங்க..!! சூப்பர் டிப்ஸ் இதோ..!!