"நீ சாவு, எனக்கு கள்ளக்காதலி போதும்" கள்ளக் காதலுக்காக கணவர் செய்த கொடூரம்..
ஒடிசா மாநிலம், சுந்தர்காஹ் மாவட்டத்தில் உள்ள ஜித்ராபள்ளி கிராமத்தை சேர்ந்தவர் 35 வயதான டெபன் குமார் பெஹ்ரா. இவருக்கு ஷம்யமாகி பெஹ்ரா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு இவரின் மனைவி ஷம்யமாகி பெஹ்ரா மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்துள்ளார். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், ஷம்யமாகியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து டெபன் குமாரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், மர்மநபர்கள் சிலர் தனது வீட்டிற்க்கு கொள்ளையடிக்க வந்ததாகவும், மனைவியின் நகைகளை பறிக்க முயன்ற போது அவர்கள் தனது மனைவியை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்ததாகவும் தெரிவித்துள்ளார். ஆனால், பிரேத பரிசோதனையின் முடிவு போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதனையடுத்து, போலீசார் அவரது கணவரிடம் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினர். விசாரணையில், மனைவி ஷம்யமாகியை கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டார். டெபன் குமாருக்கு வேறு ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு இருப்பதை அறிந்த ஷம்யமாகி, தனது கணவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த டெபன் குமார், தனது மனைவியை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்துள்ளார்.
இந்த கொலைக்கு டெபன் குமாரின் மைத்துனர் சத்ய நாராயணனும் உடந்தையாக இருந்துள்ளார். இதையடுத்து, போலீசார் டெபன் குமா மற்றும் சத்ய நாராயணன் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.
Read more: “விஜய்யை பிரிந்து சென்ற சங்கீதா…” பத்திரிகையாளர் அளித்த பரபரப்பு பேட்டி.. சோகத்தில் ரசிகர்கள்..