ரீல்ஸ் மோகத்தால் எல்லை மீறிய தாய்; போர்வைக்கு அடியில் இருந்து குழந்தைகள் பார்த்த காட்சி..
உத்தரப்பிரதேச மாநிலம், மீரட் பகுதியின் லக்வாயா கிராமத்தை சேர்ந்தவர் ராஜு. இவருக்கு சீமா என்ற மனைவியும், 10 வயதான வன்ஷிகா என்ற மகளும், 6 வயதான அன்ஷிகா என்ற மகளும், 3 வயதான பிரியான்ஷ் என்ற மகனும் உள்ளனர். ஆனால், சீமாவின் நடத்தை மீது ராஜுவிற்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில், இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் பதிவிடுவதில் சீமாவுக்கு அதிக ஆர்வம் இருந்துள்ளது. இதனால் சீமா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஏகப்பட்ட ரீல்ஸ்களை பதிவிட்டுள்ளார். இவரது விடா முயற்சியால் ஒருகட்டத்தில், இவரது ரீல்ஸ்களுக்கு நல்ல ஆதரவு கிடைத்த நிலையில், தெரியாத எண்களில் இருந்து சீமாவுக்கு பல போன்கள் வந்துள்ளது.
இதனால் ஆத்திரம் அடைந்த ராஜு, முன்பைவிட சீமாவுடன் அதிகமாக வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். சம்பவத்தன்று, வழக்கம் போல் கணவன் மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில், சீமா மீது ஆவேசமடைந்த ராஜு, சீமாவை செங்கல்லால் சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் பலத்த காயம் அடைந்த சீமா, மயங்கி கீழே விழுந்துள்ளார். மேலும், தனது 3 குழந்தைகளையும் கட்டாயப்படுத்தி தூங்க வைத்துள்ளார். தங்களின் தந்தைக்கு பயந்துக் கொண்டு, குழந்தைகள் போர்வையை மூடிக்கொண்டு, வெறுமனே கண்ணை மூடியுள்ளனர். தனது பிள்ளைகள் தூங்கிவிட்டதாக நினைத்த ராஜு, சீமாவை கத்தியால் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்துள்ளார்.
ஆனால், இந்த கொடூர காட்சியை 3 குழந்தைகளும் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர். தனது மனைவி இறந்ததை உறுதி செய்த ராஜு, தனது செல்போனையும், மனைவியின் செல்போனையும் எடுத்துக் கொண்டு ராஜூ அங்கிருந்து தப்பியுள்ளார். இது குறித்து தகவல் அறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சீமாவின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
Read more: Samuthirakani | ‘சமூக அக்கறைமிக்க படைப்பாளி’ நடிகர் சமுத்திரக்கனி பற்றி பலருக்கு தெரியாத தகவல்..!!