"எனக்கு வலிக்குது தம்பி, என்ன விட்டுரு" கெஞ்சிய பெண்; தனியாக அழைத்துச் சென்று, முக்கிய பிரமுகரின் மகன் செய்த கொடூரம்!!
நெல்லை தாழையூத்து பகுதியை சேர்ந்தவர் முகமது மீரான். அதிமுக நெல்லை சிறுபான்மை பிரிவு நிர்வாகியாக உள்ள இவர், தண்ணீர் சுத்திகரிக்கும் கம்பெனியை சொந்தமாக வைத்து நடத்தி வருகிறார். அந்த வகையில், இவர் தாழையூத்து, நெல்லை டவுன், பாறையடி உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் பாட்டில் விநியோகம் செய்து வருகிறார். இவருக்கு 30 வயதான முகம்மது சர்ஜின் என்ற மகன் உள்ளார். தண்ணீர் கம்பெனியின் ஒட்டுமொத்த நிர்வாக வேலைகளையும் பார்த்து வரும் இவர், 3 இடங்களில் உள்ள கம்பெனிகளுக்கும் அடிக்கடி சென்று வருவார். அந்தவகையில், நெல்லை டவுன், பாறையடியில் இருக்கும் தண்ணீர் கம்பெனியில் 35 வயதான திருமணமான பெண் ஒருவர் வேலை செய்து வந்துள்ளார்.
இந்நிலையில், அந்தப் பெண் மீது சர்ஜினுக்கு ஆசை ஏற்படவே, அவர் அந்தப் பெண்ணிடம் தவறான நோக்கத்தில் பழகியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண், இது குறித்து முகமது மீரானிடம் கூறியுள்ளார். இதையடுத்து, மீரானும், தனது மகன் சர்ஜினை கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சர்ஜின், அந்தப் பெண்ணை பாறையடியில் உள்ள கம்பெனியில் வேலை இருப்பதாக கூறி தனியாக அழைத்துள்ளார். பின்னர் அங்கு வந்த அந்தப் பெண்ணை, கடுமையாக தாக்கி, பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இதில் பலத்த காயமடைந்த அந்த பெண், நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, போலீசார் அந்த பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், சர்ஜின் தன்னை சிகரெட்டால் சூடு வைத்து கொடுமைப்படுத்தியதாக கூறி அழுதுள்ளார். இதையடுத்து, நெல்லை டவுன் மகளிர் போலீசார், வழக்குப்பதிவு செய்து அதிமுக பிரமுகரின் மகனான முகமது சர்ஜினை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
Read more: ஜிம்மிற்கு வந்த ஆன்டி மீது ஏற்பட்ட ஆசை; பயிற்சியாளர் செய்த காரியத்தால் பரபரப்பு..