முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

“பூஜை செய்ய வந்த இடத்தில், பூசாரி செய்த வேலை”; வெளுத்து வாங்கிய பக்தர்கள்..

woman was sexually abused in temple
06:05 PM Dec 22, 2024 IST | Saranya
Advertisement

நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம், காந்திபுரத்தில் பழமையான கிருஷ்ணா் கோயில் ஒன்று  உள்ளது. இந்து சமய அறநிலையத் துறைக்கு உட்பட்ட இந்த கிருஷ்ணா் கோயிலுக்கு அண்மையில் குடமுழுக்கு விழா நடைபெற்றது. இந்த கிருஷ்ணர் கோவிலுக்கு சேந்தமங்கலத்தை சேர்ந்த 30 வயதான இளம்பெண் ஒருவர் ஒவ்வொரு சனிக்கிழமையும் சென்று வழிபாடு செய்து வந்துள்ளார். அந்த வகையில், வழக்கம் போல் அந்த இளம்பெண் சனிக்கிழமை அன்று தனது கணவா் மற்றும் குடும்பத்தினருடன் சென்றுள்ளார். அப்போது, மாற்று அடிப்படையில், அக்கோயிலுக்கு நாமக்கல், கருங்கல்பாளையத்தை சோ்ந்த 54 வயது அா்ச்சகா் இருந்துள்ளார்.

Advertisement

குழந்தை பாக்கியம் இல்லாத அந்த பெண், அா்ச்சகரிடம் கவலையுடன் புலம்பியுள்ளார். அப்போது மாற்று அடிப்படையில் வந்த அர்ச்சகர், பரிகாரம் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார். இத்தனை நம்பிய அந்த பெண், இதற்க்கு சம்மதம் தெரிவித்துள்ளார். இதையடுத்து, அவர் அந்தப் பெண்ணை தனியாக அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால், அதிர்ச்சி அடைந்த அந்த பெண், கூச்சலிட்டுள்ளார். இளம் பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு அதிர்ச்சி அடைந்த அந்த பெண்ணின் குடும்பத்தினா் மற்றும் அங்கிருந்த பக்தா்கள், அா்ச்சகரை கடுமையாக தாக்கியுள்ளனர். மேலும், சமபவம் குறித்து சேந்தமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இதையடுத்து, போலீசார் அா்ச்சகரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து, கோயில் பாரம்பரியம் கெட்டுவிடக் கூடாது என்பதால், போலீசாரிடம் வழக்குப் பதிவு செய்ய வேண்டாம் என அவர்கள் கேட்டுக் கொண்டனா். இச்சம்பவம் குறித்து பேசிய கோயில் உதவி ஆணையா் இரா.இளையராஜா, சனிக்கிழமை மாற்று அா்ச்சகா் வந்த நிலையில், இச்சம்பவம் நிகழ்ந்தது தெரியவந்துள்ளது. இனி துப் போன்ற சம்பவங்கள் நடக்காது என்றார்.

Read more: காதலிக்கும் பெண்களே உஷார்!! காதலிகளை மாற்றி, உல்லாசம் அனுபவிக்கும் கும்பலால் பரபரப்பு..

Tags :
Priestsexual harassmenttemple
Advertisement
Next Article