காதலியுடன் உல்லாசமாக இருப்பதை நேரில் பார்த்த நண்பர்கள்; நண்பர்களும் ஆசைப்பட்டதால் காதலன் செய்த காரியம்..
ஆந்திரப் பிரதேச மாநிலம், விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், சட்டக்கல்லூரியில் படித்து வந்துள்ளார். இவர், வம்சி என்பவருடன் நட்பாக பழகி வந்துள்ளார். நாளடைவில் இவர்களின் நட்பு, காதலாக மாறியுள்ளது. இதையடுத்து, கடந்த ஆகஸ்ட் மாதம் 13ஆம் தேதி, வம்சி, தனது காதலியை கிருஷ்ணா நகரில் உள்ள தனது நண்பரின் அறைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு இருவரும் உல்லாசமாக இருந்துள்ளனர். அவர்களின் அந்தரங்க காட்சிகளை, வம்சி உதவியுடன் அவரது நண்பர்கள், வீடியோவாக பதிவு செய்துள்ளனர். பின்னர், அவரது நண்பர்களும் உல்லாசமாக இருக்க ஆசை பட்டதால் வம்சி மற்றும் அவரது நண்பர்கள் அந்த வீடியோவை மாணவியிடம் காட்டி மிரட்டி, அவரை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
அன்றோடு முடியாமல், தங்களுக்கு தேவை படும் போது எல்லாம் மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இப்படி பல மாத துன்புறுத்தலுக்கு பிறகு, மன உளைச்சல் அடைந்த மாணவி நேற்று முன் தினம் தனது வீட்டில் தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவியின் தந்தை, அவரை காப்பாற்றி விசாரித்துள்ளார். அப்போது மாணவி, தனக்கு நேர்ந்த கொடுமைகளை தனது தந்தையிடம் கூறி அழுதுள்ளார். இதனால் மனம் உடைந்து போன தந்தை, சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
புகாரின் பேரில், வம்சி மற்றும் அவருடைய நண்பர்கள் மூன்று பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காதலனை நம்பிச் சென்ற மாணவியை, நண்பர்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த கொடூர சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Read more: இயந்திரத்தில் சிக்கிய, பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கை!!! அதிர்ச்சியில் ரசிகர்கள்..