"அண்ணி, ஒழுங்கா என்கூட உல்லாசமா இருங்க" ஆசைக்கு இணங்க மறுத்ததால், பெண்ணிற்கு நேர்ந்த கொடூரம்..
மேற்குவங்கம் மாநிலம், கொல்கத்தா, டயமண்ட் ஹார்பர் பகுதியை சேர்ந்தவர் அதியர் ரஹ்மான் லஷ்கர். இவர் கட்டுமானத் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். திருமணமான இவரது சகோதரருக்கும் அவரது மனைவிக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இருவரும் பிரிந்துவிட்டனர். இதனால், தனியாக வசித்து வந்த அவரது அண்ணி மீது ரஹ்மான் லஷ்கருக்கு ஆசை ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில், இவரின் ஆசை குறித்து ரஹ்மானின் அண்ணிக்கு தெரியவந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், ரஹ்மானின் ஆசைக்கு உடன்பட மறுத்து விட்டார்.
சம்பவத்தன்று, ரஹ்மான் தனது அண்ணியுடன் உல்லாசமாக இருக்க ஆசைப்பட்டுள்ளார். ஆனால் அதற்க்கு அவரது அண்ணி மறுப்பு தெரிவித்து விட்டார். தனது அண்ணியுடன் உல்லாசமாக இருக்க அவர் எடுத்த முயற்சி தோல்வி அடைந்ததால் ஆத்திரம் அடைந்த ரஹ்மான், அவரது அண்ணியை கொடூரமாக கொலை செய்துள்ளார். அவர் உயிரிழந்த பிறகும் ஆத்திரம் அடங்காத ரஹ்மான், தனது அண்ணியின் தலையை துண்டித்து, உடலை 3 பாகமாக வெட்டி உடலை வீசியுள்ளார். அவரது அண்ணியின் உடல் பாகங்கள் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் ரஹ்மான் கொலை செய்தது உறுதியானதை அடுத்து, போலீசார் அவரை கைது செய்தனர்.
Read more: கொடூரத்தின் உச்சம்!!! சிறுமியின் சடலத்தையும் விட்டுவைக்காமல், வாலிபர்கள் செய்த காரியம்..