வீட்டில் தனியாக இருந்த சித்தி; உள்ளே சென்ற மகன்.. அலறல் சத்தத்தால் அதிர்ந்த அக்கம்பக்கத்தினர்..
கர்நாடக மாநிலம், பாகல்கோட் மாவட்டம், கோதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஷோபா. இவரது அக்கா மகன் பீமப்பா. ஷோபா, இளைஞர் ஒருவருடன் கள்ளத்தொடர்பில் இருந்துள்ளார். இது குறித்து அறிந்த பீமப்பா, கள்ளத்தொடர்பை கைவிடும்படி கண்டித்துள்ளார். ஆனால் எதையும் கண்டுக்கொல்லாத ஷோபா, மீண்டு அந்த இளைஞருடன் தொடர்பில் இருந்துள்ளார். இதனால், இருவருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்த ஷோபாவுக்கும் பீமப்பாவுக்கும் இடையே வழக்கம் போல் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்த பீமப்பா, ஷோபாவின் தலையில் கல்லை போட்டுள்ளார்.
இதில் பலத்த காயமடைந்த ஷோபா, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர், ஜம்கண்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், ஷோபாவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, போலீசார் விசாரணை நடத்தியதில் ஷோபாவின் கள்ளக்காதலுக்கு பீமப்பா எதிர்ப்பு தெரிவித்ததால், ஷோபா சூனியம் செய்து பீமப்பாவின் வீட்டின் முன் வைத்துள்ளார். மேலும், அவருக்கு வேலை கிடைக்க கூடாது என்பதற்காக பீமப்பாவை பற்றி அவதூறு பரப்பியுள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த பீமப்பா, ஷோபாவைக் கொலை செய்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து, பீமப்பா மீது வழக்கு பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Read more: “உனக்கு என்னோட புருஷன் கேக்குதா?” கொதிக்கும் எண்ணெயை, ஊற்றி பெண்மசெய்த கொடூரம்!!