"என்னங்கையா இது நியாயம்.?" அடிக்கடி 'Toilet' சென்றதால் விமானத்திலிருந்து வெளியேற்றப்பட்ட பெண் பயணி.!
விமான பயணங்களின் போது பல்வேறு காரணங்களால் விமான பயணிகள் மற்றும் அதில் பணியாற்றுபவர்களிடையே மோதல் ஏற்பட்டு வருகிறது. சமீபத்தில் மெக்சிகோ நாட்டிலிருந்து கனடா நாட்டிற்கு பயணம் செய்ய இருந்த பெண் பயணி விமானத்திலிருந்து வெளியேற்றப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மெக்சிகோ நாட்டிலிருந்து கனடா நாட்டிற்குச் செல்ல இருந்த வெஸ்ட் ஜெட் விமானத்தில் ஜோனா சியு என்பவர் விமான ஊழியர்களால் வெளியேற்றப்பட்டு இருக்கிறார்.
அந்தப் பயணி அதிக முறை டாய்லெட் பயன்படுத்தியதாக கூறி விமானத்தின் ஊழியர்கள் அவரை விமானத்திலிருந்து வெளியேற்றி இருக்கின்றனர். இது தொடர்பாக தனது X தளத்தில் பதிவு செய்திருக்கும் அவர் மெக்ஸிகோவில் இருந்து கனடா நாட்டிற்கு பயணம் மேற்கொள்ள வெஸ்ட் ஜெட் விமானத்தில் பயணிக்க இருந்தேன். இந்நிலையில் எனக்கு வயிற்றில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக அடிக்கடி 'Toilet' பயன்படுத்த வேண்டி இருந்தது.
நான் அடிக்கடி கழிவறையை பயன்படுத்தி வந்ததால் விமான ஊழியர்கள் என்னை விமானத்தில் இருந்து வெளியேற்றினார்கள். மேலும் நான் அடுத்த நாள் பயணம் செய்வதற்கான விமான டிக்கெட் மற்றும் ரிசர்வேஷன் குறித்து இந்த தகவலையும் எனக்கு தெரிவிக்கவில்லை. அவசரமாக விமானத்தில் இருந்து வெளியேற்றப்பட்டதால் என்னுடைய உடைமைகள் மற்றும் பணம் எதையும் எடுக்க முடியவில்லை. ஹோட்டல் செல்வதற்கு கூட பணம் இல்லை என்று விமான நிலைய ஊழியர்களிடம் கூறினேன் என கண்ணீருடன் பதிந்திருக்கிறார்.
இந்த சம்பவத்தில் விமான நிலையத்தைச் சேர்ந்த ஊழியர் ஒருவர் அந்த பெண்ணிற்கு உதவி செய்ததாக பத்திரிகையாளர் தெரிவித்திருக்கிறார் மேலும் தனக்கு நடந்த இந்த சம்பவத்தை சமூக வலைதளங்களில் பகிர்ந்ததை தொடர்ந்து அந்தப் பெண்ணை தொடர்பு கொண்ட விமான நிறுவனம் அவரது பயணத்திற்கான புக்கிங் ரெஃபரன்ஸ் அனுப்பியதாக பத்திரிக்கையாளர் தெரிவித்திருக்கிறார். உடல் உபாதைகளால் அவதிப்பட்ட பெண் விமானத்திலிருந்து வெளியேற்றப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.