For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

குழந்தைகளை விட்டுவிட்டு கள்ளக்காதலனுடன் சென்ற பெண்ணிற்கு நேர்ந்த சோகம்; கேரளாவை அதிர வைத்த கொடூர சம்பவம்..

woman-was-burnt-alive-as-she-opposed-to-live-with-her-lover
05:18 PM Nov 12, 2024 IST | Saranya
குழந்தைகளை விட்டுவிட்டு கள்ளக்காதலனுடன் சென்ற பெண்ணிற்கு நேர்ந்த சோகம்  கேரளாவை அதிர வைத்த கொடூர சம்பவம்
Advertisement

கேரள மாநிலத்தின் கொல்லம் பகுதியைச் சேர்ந்தவர் சஜிமோல். கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இவர் தனது குழந்தைகளுடன் பெற்றோர் வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அவருக்கு சிபு என்ற நபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நட்பாக பழகி வந்த இருவரும், ஒரு கட்டத்தில் காதலிக்க தொடங்கியுள்ளனர். பின்னர், சில மாதங்களில் இருவரும் ஒரே வீட்டில் திருமணம் செய்து கொள்ளாமல் லிவிங் டுகெதரில் வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில், எதிர்பாராத விதமாக சிபு விசா முறைகேடு தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டார். இதனால் சஜிமோல் தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளார்.

Advertisement

இதனால் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. மேலும் பலமுறை சிபு தனது காதலி சஜிமோலை தன்னுடன் சேர்ந்து வாழ வருமாறு வற்புறுத்தியும், சஜிமோல் மறுத்து விட்டார். இதையடுத்து, நேற்றிரவு சஜிமோலின் பெற்றோர் வீட்டிற்கு சென்ற சிபு தனது காதலியை தன்னுடன் சேர்ந்து வாழ வருமாறு வற்புறுத்தியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த சிபு, தான் வைத்திருந்த பெட்ரோலை சஜிமோல் மீது ஊற்றி தீ வைத்துள்ளார். மேலும், மீதம் இருந்த பெட்ரோலை தன் மீது ஊற்றி தீ வைத்து தற்கொலை செய்து கொண்டார்.

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சஜிமோலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தற்கொலை செய்து கொண்ட சிபு உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். இந்நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சஜிமோல் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் கேரள மாநிலத்தில் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

Read more: “நீ இருக்க நிறத்துக்கு, என் மகள் உன்கூட நடிக்கனுமா?” பிரபல நடிகரை அசிங்கப்படுத்திய நடிகையின் தாய்..

Tags :
Advertisement