முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

கொடூரத்தின் உச்சம்!!! 9 மாத குழந்தையை, மாடியில் இருந்து தூக்கி வீசிய தாய்.. விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்..

woman throwed her 9 months old baby from terrace
07:28 PM Jan 27, 2025 IST | Saranya
Advertisement

உத்தரப்பிரேதச மாநிலத்தில், 27 வயதான அஞ்சு தேவி என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த சில வருடத்திற்கு முன்பு வாலிபர் ஒருவரை காதல் திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில், இந்த தம்பதிக்கு தற்போது 9 மாத ஆண் குழந்தை ஒன்று உள்ளது. இந்நிலையில், அஞ்சு தேவி தனது 9 மாத ஆண் குழந்தையுடன் தனது தாயின் வீட்டில் உள்ளார். அதே வீட்டில், அஞ்சு தேவியின் மூத்த சகோதரியான மனிஷாவும் கடந்த இரண்டு மாதங்களாக வசித்து வருகிறார். இந்நிலையில், சகோதரிகள் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

Advertisement

இதையடுத்து, வழக்கம் போல், நேற்று காலை சகோதரிகள் இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த அஞ்சுதேவி, தனது சகோதரி மீதுள்ள கோவத்தில் தனது 9 மாத ஆண் குழந்தையை, வீட்டின் மாடியிலிருந்து கீழே தூக்கி வீசியுள்ளார். இதனால் அதிர்ச்சியில் உறைந்துப் போன அஞ்சு தேவியின் தாய் ஷோபா, உடனடியாக குழந்தையை மீட்டு மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார்.

அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதையடுத்து, ஷோபா தனது மகள் அஞ்சு தேவி மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், தனது சகோதரியான மனிஷாவை சிக்க வைப்பதற்காக, அஞ்சு தேவி தனது குழந்தையை தூக்கி வீசியதாக கூறப்படுகிறது. இதையடுத்து, பெற்ற குழந்தையை கொடூரமாக கொலை செய்த அஞ்சு தேவியை போலீசார் கைது செய்துள்ளனர்..

Read more: “மனைவியின் எலும்பு துண்டுகளை உரலில் போட்டு இடித்து…” நெஞ்சை ரணமாக்கும் கொடூர சம்பவம்..

Tags :
babymurderwoman
Advertisement
Next Article