பெண்ணை நிர்வாணமாக்கி ஊர்வலம்.! கம்பத்தில் கட்டி வைத்துக் கொடூர சித்திரவதை.! 7 பேர் கைது.! நடந்தது என்ன.?
கர்நாடக மாநிலம் பெல்காவி மாவட்டத்தில் பெண் ஒருவர் நிர்வாணமாக்கப்பட்டு ஊர்வலமாக அழைத்துச் சென்று மின்சார போஸ்டில் கட்டி வைத்து சித்திரவதை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக ஏழு பேரை கைது செய்திருக்கும் காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அப்பகுதியில் பதட்டத்தை தணிக்க தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருக்கிறது.
கர்நாடக மாநிலம் பெல்காவி மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றில் ஒரு வீட்டிற்குள் புகுந்த கும்பல் அந்த வீட்டில் இருந்த பெண்ணை நிர்வாணமாக்கி சித்திரவதை செய்து ஊர்வலமாக இழுத்து வந்தது. மேலும் அங்குள்ள மின்சார கம்பத்தில் அந்தப் பெண்ணை அடித்து உதைத்து சித்திரவதை செய்ததோடு அவரது வீட்டையும் அடித்து உடைத்தது. இது தொடர்பாக தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று அந்தப் பெண்ணை காப்பாற்றியதோடு இந்த சம்பவத்தில் ஈடுபட்ட ஏழு பேரை கைது செய்தனர்.
In #Karnataka's #Belagavi, a couple who were in love eloped, boy's mother was stripped naked and beaten her up.
— Hate Detector 🔍 (@HateDetectors) December 11, 2023
A woman was stripped naked, paraded in the village, tied to a pole and beaten on Sunday night in #HosaVantamari village of the taluk. Her house was set on fire.… pic.twitter.com/xp8InuOtuI
இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் அந்தப் பெண்ணின் மகன் அசோக் என்ற 24 வயது இளைஞர் அதே ஊரைச் சேர்ந்த பிரியங்கா என்ற பெண்ணை கூட்டிக்கொண்டு ஊரை விட்டு ஓடியதால் பெண் வீட்டார் ஆத்திரத்தில் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்திருக்கிறது. மேலும் அந்தப் பெண் வேறொருவருடன் நிச்சயதார்த்தம் செய்யப்பட்டவர் என்பதும் விசாரணையில் வெளியாகி இருக்கிறது. அப்பகுதியில் மேற்கொண்டு அசம்பாவிதங்கள் நிகழாமல் இருக்க பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கிறது.
இது தொடர்பான வீடியோவும் சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவம் குறித்து கண்டனம் தெரிவித்த கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா இதனை மனிதத் தன்மையற்ற கொடூரமான செயல் என விமர்சித்திருக்கிறார். மேலும் இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் சட்டத்தின் பிடியிலிருந்து தப்ப முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.