புரோகிதருடன் சேர்ந்து மணமகள் போட்ட பிளான்.. 10 ரூபாய் நோட்டுகளால் நின்று போன திருமணம்!!!
எல்லா பெண்களுக்கும் திருமணத்தை பற்றிய கனவு, தனது கணவர் எப்படி இருக்க வேண்டும் என்ற கனவு இருக்கும். என்ன தான் ஒரு பெண்ணிற்கு ஆசை இருந்தாலும், ஆயிரம் பொய் சொல்லி ஒரு திருமணத்தை நடத்தி விடலாம் என்று மணமகளை பொய் சொல்லி ஏமாற்றி விடுவது உண்டு. அப்படி ஒரு சம்பவம் தான் இங்கு நடந்துள்ளது. ஆனால், மணமகள் புத்தி சாலி என்பதால் அவர் மணமகனின் பித்தலாட்டத்தை கண்டு பிடித்து விட்டார்.
உத்தரப்பிரதேச மாநிலம் பருக்காபாத் மாவட்டத்தில் உள்ள தொல்காப்பூர் கிராமத்தை சேர்ந்தவர், 21 வயதான ரீட்டா. சமீபத்தில், இவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில், திருமணத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும் நடந்துள்ளது. படித்து வேலைக்குச் செல்லும் பெண்ணான ரீட்டா, மணமகன் தன்னை போல் படித்தவராக இருக்க வேண்டும் என்ற கோரிக்கையை மட்டும் தான் வைத்தார். மணமகன் நன்கு படித்தவர் என்று கூறப்பட்ட நிலையில், ரீட்டா திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தார். ஆனால், ரீட்டாவிற்கு ஆரம்பத்தில் இருந்தே மணமகனின் நடந்தையில் சந்தேகம் இருந்து வந்துள்ளது.
இந்நிலையில், திருமணத்திற்கு முந்தைய நாள் திருமண சடங்குகளில் மாப்பிள்ளை குதிரையில் ஏறி ஊர்வலமாக சென்றுள்ளார். அப்போதும் ரீட்டாவிற்கு மணமகன் உண்மையிலேயே படித்தவர் தானா என்ற சந்தேகம் வந்துள்ளது. இதனால் மணமகன் உண்மையிலேயே படித்துள்ளாரா என்பதை தெரிந்து கொள்ள ரீட்டா முடிவு செய்துள்ளனர். அதன் படி, ரீட்டா திருமணத்தை நடத்தி வைக்க வந்த புரோகிதரிடம், 30 நோட்டுகள் இருந்த பத்து ரூபாய் பணக்கட்டைக் கொடுத்து, அதை மணமகனிடம் எண்ணி சரி பார்க்க சொல்லுங்கள் என்று கூறியுள்ளார்.
மணமகளின் கோரிக்கையை ஏற்ற புரோகிதரும், மணமகள் கூறிய படி அவ்வாறே செய்துள்ளார். அங்கு தான் மணமகனின் உண்மை முகம் வெளிவந்துள்ளது. ஆம், புரோகிதர் கொடுத்த 30 நோட்டுகளையே அவரால் சரிவர எண்ண முடியவில்லை. மணமகன் பணத்தை எண்ண தடுமாறுவதைப் பார்த்து, மணமகள் வீட்டார் அதிர்ச்சி அடைந்தனர். இந்த சம்பவம் மூலம் மணமகன் கொஞ்சம் கூட படிக்காதவர் என்பது உறுதியானது. இதனால் கோபமான மணமகள், 'இந்த மாப்பிள்ளையே தனக்கு வேண்டாம்' என திருமணத்தையே நிறுத்தி விட்டார்.