"எனக்கு குழந்தை வேண்டாம், கணவர் மட்டும் போதும்" குற்றம் செய்த கணவருக்காக, பச்சிளம் குழந்தைக்கு தாய் செய்த காரியம்..
மும்பையை சேர்ந்த தம்பதிக்கு கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு குழந்தை ஒன்று பிறந்துள்ளது. இந்நிலையில், தற்போது குழந்தையின் தந்தையை அவர் செய்த குற்றத்திற்காக போலீசார் அவரை கைது செய்தனர். இந்த தம்பதிக்கு போதிய பணம் வசதி இல்லை. இதனால், குழந்தையின் தாயால் அவரது கணவனை ஜாமினில் இருந்து எடுக்க முடியவில்லை. இதனால் விரக்தி அடைந்த குழந்தையின் தாய், வேறு வழி இல்லாமல் தனது பிஞ்சு குழந்தையை விற்க முடிவு செய்துள்ளார்.
அவர் போட்ட திட்டத்தின் படி, அவர் தனது பிஞ்சு குழந்தையை விற்று ஒரு லட்ச ரூபாய் பணம் திரட்டியுள்ளார். ஒரு கட்டத்தில், இந்த சம்பவம் இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், நடந்த சம்பவத்தை குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் பெண்ணின் மாமியார் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குபதிவு செய்த போலீசார், விசாரணை மேற்கொண்டனர். விசாரணையின் அடிப்படையில், குழந்தையை விற்பனை செய்ய உறுதுணையாக இருந்தவர்கள் 8 பேரை கைது செய்தனர்.
மேலும் விற்பனை செய்யப்பட்ட குழந்தையின் தாயையும் போலீசார் அதிரடியாக கைது செய்தனர். தொடர்ந்து போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், குழந்தை கர்நாடகாவில் இருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து, அந்த இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் குழந்தையை மீட்டு தங்களின் பாதுகாப்பில் பத்திரமாக வைத்துள்ளனர். அந்த வகையில், குற்றம் செய்த தனது கணவரை ஜாமீனில் எடுக்க, பிறந்து ஒரு மாதமே ஆன பச்சிளம் குழந்தையை தாயே விற்பனை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Read more: 10 வயது சிறுமியின் பிறப்புறுப்பை, இரும்பு கம்பியால் தாக்கிய கொடூரன்!!