போன் பேச தொந்தரவு.! கழுத்தை நெரித்து கொடூரமாக கொலை செய்யப்பட்ட 2 வயது குழந்தை.! பதற வைக்கும் சம்பவம்.!
ஜார்க்கண்ட் மாநிலத்தில் போன் பேசுவதற்கு இடையூறாக இருந்ததால் இரண்டு வயது மகன் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக தாயை கைது செய்துள்ள காவல் துறையினர் அவரிடம் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜார்க்கண்ட் மாநிலம் கிரிடித் பகுதியைச் சேர்ந்தவர் அப்சானா ஹாத்துன். இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் இருந்தது. இந்நிலையில் இவருக்கும் இவரது கணவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு சண்டையாக மாறியுள்ளது. இதனைத் தொடர்ந்து கணவனின் மீது கோபமடைந்த அப்சானா தனது இளைய மகனை தூக்கிக்கொண்டு அறைக்குள் சென்று கதவை பூட்டி இருக்கிறார்.
பின்னர் தனது உறவினர்களுடன் செல்போனில் பேசியதாக தெரிகிறது. அப்போது குழந்தை அழுது கொண்டே இருந்ததால் ஆத்திரத்தில் குழந்தையின் கழுத்தை நெரித்துள்ளார். இதில் குழந்தை மயக்கமடைந்துள்ளது. இதனைத் தொடர்ந்து இரவு நேரம் கணவருடன் சமாதானமானவர் கணவனை அரைக்க அழைத்திருக்கிறார். அப்போது அவரது கணவன் உள்ளே சென்று பார்த்தபோது குழந்தை மயக்கமடைந்த நிலையில் கடந்து இருக்கிறது.
இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர் உடனடியாக குழந்தையை எடுத்துக் கொண்டு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும் குழந்தையின் தாய் அபசனாவை கைது செய்தனர். அவர் தான் குழந்தையை கொலை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் தாக்கவில்லை என காவல்துறையிடம் தெரிவித்திருக்கிறார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.